மர்ம விலங்கின் காலடி தடம்.. அதிகாலையில் இறந்து கிடந்த ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த ஊர்மக்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதி அருகே மர்ம விலங்கு ஒன்று ஊருக்குள் புகுந்து விலங்குகளை கொல்லும் சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சீட்டுக்கு அடியில என்ன இருக்கு? உண்மைய சொல்லுங்க.. ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த கார்.. விசாரணையில் தெரிய வந்த உண்மை

மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த சேவல்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள இருக்கும் நஞ்சை புளியம்பட்டி கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் சரவணன் என்பவரின் வீட்டில் இருக்கும் 4 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர், தெரு நாய்கள் கடித்ததால் தான் உயிரிழந்திருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மர்ம விலங்கின் காலடி தடம்:

இந்நிலையில் தான் நேற்றும் நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் வந்த மர்ம விலங்கு இதற்கு முன் ஆடுகளை கடித்து கொன்ற அதே பகுதியில் மீண்டும் தென்பட்டது. இதனை அப்பகுதி மக்களும் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில் மீண்டும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மர்ம விலங்கு தென்பட்ட இடங்களில் காலடி தடங்களை பதிவு செய்தனர். பின்னர் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

கணிசமாக அதிகரித்துள்ள புலி, சிறுத்தைகள்:

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறும்போது, 'மர்ம விலங்கு நடமாடிய கிராமமானது புலிகள் காப்பகத்தின் அருகே ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. அதோடு சத்தியமங்கலம் வன பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இறந்த 4 ஆடுகள்:

இதேபோல், அருகிலிருக்கும் டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்றும் வந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்து கொன்றதுமே, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள், தெரு நாய்கள் கடித்து உள்ளதாக கூறிச்சென்றனர்.

இரவு நேரங்களில் கண்காணிப்பு :

இப்போது நாங்களே அதனை பார்த்தோம். அதன் பின்னரே கேமரா பொருத்தி உள்ளனர். சிறுத்தை, புலி போன்ற விலங்குகளால் கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் மர்ம விலங்கு குறித்து வனத்துறையினர் கண்டறிவதுடன், இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அவினாசி, பெருமாநல்லூர் பகுதியில் கடந்த 4  நாட்களுக்கு முன்பு புலி பிடிபட்ட நிலையில் வன எல்லை பகுதியில் இருந்து கூட சிறுத்தைகள் கூட வந்திருக்கலாம் என்ற தகவலும் கிராம மக்கள் பீதி அடைய செய்துள்ளது.

Online ஆர்டர் அட்ராசிட்டி.. ஹாயா உக்கார 'சேர்' ஆர்டர் செய்த 'பெண்'.. "வந்தது என்னமோ சேர் தான்.. ஆனா, அதுல தான் ஒரு பெரிய ட்விஸ்ட்டே"

MYSTERIOUS ANIMAL, SATYAMANGALAM, மர்ம விலங்கு, ஈரோடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்