அதெல்லாம் சும்மா 'வதந்தி' யாரும் நம்பாதீங்க... 'ஹோட்டல்' உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உணவு கட்டணம் உயர்வு குறித்து வெளியான தகவல்களுக்கு, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப்பின் ஹோட்டல்களில் நாளை முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 50% இருக்கைகள் தான் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் ஹோட்டல்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ''தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும். உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை'' என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
உணவகம் திறப்பு மற்றும் அதன் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்களை தமிழக அரசின் விதிமுறைகள்:-
* உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
* உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு, சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.
* உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி
* உணவகங்களில் சாப்பிடும் டேபிள்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* உணவகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது.
* ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
* உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
* உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
* உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.
* பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
* அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அக்யூஸ்ட்டுக்கு' தண்டனை வாங்கிக் 'குடுக்கலாம்னு' பாத்தா... 'அக்யூஸ்டே தண்டனை குடுத்திடுறான்...' 'கொள்ளையன்' மூலமாக '6 போலீசாருக்கு' கொரோனா...
- 'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி!
- 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'தனியார் மருத்துவமனையில் எவ்வளவு'?... 'நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்'... வெளியான அறிவிப்பு!
- 'சென்னை to பாண்டி'... 'சொந்தக்காரங்க வீட்டுக்கு போன இடத்தில்'... 'எதிரிக்கு கூட வரக்கூடாத துயரம்'... நெஞ்சை ரணமாக்கும் வீடியோ!
- கொரோனா பாதிப்பில் ‘டாப்’ இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து.. ‘புதிதாக’ இணைந்த மற்றொரு ‘மாவட்டம்’..!
- 'ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்'?.... 'பிரபல மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு'... வெளியான திடுக்கிடும் தகவல்!
- ஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்!.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்!.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்!
- 'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க!'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்!
- கொரோனா சிகிச்சைக்கு... இனிமே இந்த 'தடுப்பூசி' தான் பயன்படுத்த போறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்