சசிகலாவைத் தொடர்ந்து.. அவருடன் சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை!.. வெளியான பரபரப்பு முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் என சிறையில் அவஸ்தைப்பட்ட சசிகலாவுக்கு உடனடியாக பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் உறுதியானது.
இதுபற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியான அறிக்கையின் மூலம் அவருடைய நுரையீரலில் தொற்று தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது. முன்னதாக அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில்தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய ஆக்சிஜன் அளவு உயர தொடங்கியதாகவும், நுரையீரல் தொற்று குறைந்ததாகவும், ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சசிகலாவைப் போலவே இளவசியும் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்படுவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. அதனடிப்படையில் இளவரசிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின்' இன்றைய (22-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'திடீரென கிடுகிடுவென உயர்ந்த வீடுகளின் விற்பனை'... 'மக்களின் ஆர்வத்துக்குக் காரணம் என்ன'?... ஆச்சரிய தகவல்!
- '6 மாச குழந்தை'... 'விடாமல் துரத்திய பயம்'... 'ஆனா இப்படி ஒரு கணவன் கூட வாழ கொடுத்து வைக்கலியே'... நொறுங்கிப்போன மனைவி!
- 'சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி...' 'RT-PCR டெஸ்ட் மூலம் தெரிந்தது...' - கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்...!
- 'தமிழகத்தின்' இன்றைய (21-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- VIDEO: 'மொதல்ல ஒரு பேக் எடுத்து டேபிள்ல வைக்குறார்...' 'ரிட்டர்ன் வர்றப்போ அங்கிருந்த...' 'தெரிய வந்துள்ள அதிர வைக்கும் உண்மை...' - பதற வைத்த சிசிடிவி காட்சி...!
- “கன்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ் வர்றது போல் வருது”!.. சொல்லும்போதே வெடித்து அழும் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் ஊழியர் !!.. உலகையே கலங்க வைத்த வீடியோ!
- ‘மூச்சுத்திணறலா? திடீரென குறைந்த ஆக்ஸிஜன் அளவு!’.. சசிகலா இப்போ எப்படி இருக்கார்?.. பெங்களூரில் டிடிவி தினகரன் கூறிய தகவல் என்ன?!
- 'விடுதலை' தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'சசிகலா'!
- 'தமிழகத்தின்' இன்றைய (20-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!