தமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்?... சென்னை வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பனிப்பொழிவு எவ்வாறு இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 3 நாட்களாக எந்த இடத்திலும், குறைந்தபட்சம், 1 செ.மீ. அளவு கூட மழை பெய்யவில்லை. சில இடங்களில், சிறு துாறல் மட்டும் விழுந்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களை பொறுத்தவரை பகலில் மிதமான வெயிலும், இரவில் பனி மூட்டமும் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கில் இருந்து வீசும் காற்று வலுவிழந்து விட்ட நிலையில், வளி மண்டலத்தில் பனி மூட்டம் அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. போகிப் பண்டிகையினால் ஏற்படும் புகை 9 மணி வரையில், பனிமூட்டத்துடன் சேர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில்... தாயுடன் தூங்கிய குழந்தை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- நண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "சில்லறை வாங்குவது போல்..." "மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய"... "மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு"...
- 'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!
- சென்னை மெட்ரோ ரயிலில் அதிரடி ஆஃபர்... பொங்கல் தினத்தின் 3 நாட்களும்... கட்டண சலுகை அறிவிப்பு
- "இந்த ஒரு பொய் சொன்னா"... "செம்ம அடி வாங்குவீங்க"... "ஆசிரமவாசி அலறல்"... "அப்டி என்ன பொய்யா இருக்கும்?"...
- 'கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம் டா'... 'True caller' மூலம் நம்பரை தூக்கிய இளைஞர்'... பகீர் சம்பவம்!
- அடுத்த 24 மணிநேரத்தில்... விடைபெறும் வடகிழக்கு பருவமழை... பனிப்பொழிவு நிலவும்... வானிலை மையம் தகவல்!