பஸ் ஸ்டான்ட் டாய்லெட் உள்ளே நுழைந்தபோது.. அங்கு இருந்ததைக் கண்டு ஷாக் ஆன பொதுமக்கள்.. இதெல்லாம் எப்படி இங்க வந்துச்சு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாங்குநேரி: நாங்குநேரி பஸ் ஸ்டான்ட் பகுதியில் இருந்த கழிவறையில் இருந்து ஐம்பொன் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐந்து உலோகங்கள் சேர்த்து செய்யப்படும் சிலை:
பழங்கால நம் வாழ்வு முறைகளை குறித்து அறிய கல்வெட்டுகளும், சிலைகளும் பெரிதும் உதவி வருகின்றன. அதோடு சில பகுதிகளில் ஐம்பொன் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. ஐம்பொன் சிலை என்பது செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மூலம் செய்யப்படுவதால் இவை பஞ்சலோகம் எனவும் சில இதிகாச நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருடர்கள் அதிகரிப்பு:
ஐம்பொன் சிலை செய்யப்படும்போது 85% செம்பு, 13% பித்தளை, 2% காரியம் இருக்கும். இதன் கூட்டுத்தொகையே 100% விழுக்காடு வந்துவிடும். சிலை செய்யும்போது மிக மிக குறைந்த அளவில் தங்கமும் வெள்ளியும் சேர்க்கப்படும் என்பதனால் அவை ஐம்பொன் சிலையின் எடையில் சேர்க்கப்படுவது இல்லை. மேலும், இன்றைய காலத்தில் இம்மாதிரியான பழங்கால சிலைகளுக்கு கிராக்கி அதிகம். எவ்வளவு விலை இதனை வாங்க பலர் தயாராக இருக்கும் நிலையில், திருடர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தொடரும் சிலை கடத்தல்:
மேலும், இந்தியாவில் இருந்து இவ்வகையான விலைமதிப்பில்லா புராதனச் சிலைகள் கடத்தப்பட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது. இத்தகைய ஆயிரம் ஆண்டு பழைமையான உமாபரமேஸ்வரி சிலை 6,50,000 டாலருக்கு அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு நபருக்கு விற்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் (Asian Civilization Museum) வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் மட்டுமே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.
பையில் இருந்த சிலைகள்:
இந்நிலையில், நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் ஒரு பையில் நான்கு ஐம்பொன் சிலைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி போலீசார் அந்த சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனுடன் இருந்த கத்தி:
கைப்பற்ற பட்ட பையில் முக்கால் அடி உயரம் கொண்ட கையில் குழந்தையுடன் உள்ள பேச்சி அம்மன் சிலையும், அரை அடி உயரம் உள்ள மற்றொரு பேச்சி அம்மன் சிலையுடன் மேலும் இரு பணிப்பெண்கள் சிலையும் ஆக மொத்தம் 4 ஐம்பொன் சிலைகளும் ஒரு பழைய கத்தியும் கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி சிலைகள் கழிவறையில் வந்தது?
மேலும், அந்த சிலைகள் எங்கிருந்து வந்தன? யாரும் கடத்தி வந்தார்களா? அல்லது ஏதாவது கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் நடத்தி வருகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதோடு, இந்த சிலைகள் குறித்து நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த வருவாய் துறையினர் அந்த சிலைகளை தாலுகா அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகவேலிடம் ஒப்படைத்தனர். தற்போது கைப்பற்றப்பட்ட சிலை அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வருமான வரி செலுத்த போறீங்களா? பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பத்து பேர் முகத்துலையும் 'மங்கி' குல்லா.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடுமை.. நடுங்கி போன குடும்பம்!
- ஒரு கிராமத்தில் 1500 திருடர்கள்! கொள்ளை அடிப்பது எப்படின்னு ஸ்பெஷல் கிளாஸ் வேற நடக்குது.. அதிர்ச்சி தகவல்
- இருட்டெல்லாம் பார்த்தா 'தொழில்' பண்ண முடியுமா...? திருடப்போனவர்களுக்கு 'கிடைத்த' மறக்க முடியாத பரிசு...!
- 'தீவிர காங்கிரஸ்காரர்'... 'மக்கள் சேவையே பிரதானம்'... ‘மீண்டும் நாங்குநேரியில் களம் காணும் டாக்டர் ரூபி மனோகரன்!’
- ‘சினிமா ஷூட்டிங்கிற்கு கார்’.. ‘பொறியியல் மாணவர்களுக்கு குட்டி ஹெலிகாப்டர்!’.. புல்லட் திருட்டில் பட்டம் பெற்ற ‘இன்ஜினியர்’.. மிரள வைக்கும் நெட்ர்வொர்க்!
- ‘இடைத்தேர்தல் முடிவுகள்’.. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி..! தமிழகத்தில் நிலவரம் என்ன..?
- ‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..
- "Jagan Mohan Reddy Implements My Plans In Andhra Pradesh ... அவரு என் புத்தகத்தை படிச்சிருக்காருன்னு நெனைக்கிறேன்," Says Seeman!
- 'ஜெயிக்கப்போவது 'அதிமுக'வா இல்லை 'திமுக'வா?... '2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு'!