'மலை' உச்சியில் பற்றிய "தீ"... கருகிப் போன பல ஏக்கர் "காடுகள்"... "கடம்பூர்" மலையில் நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது கடம்பூர் மலை. அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ள கம்பத்தராயன் கிரி என்னும் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக சுமார் இரவு 7 மணியளவில் தீ பற்றி எரிந்திருக்கிறது. காட்டுத்தீ அதிகமாக பரவியதையடுத்து அதனை வெகு தொலைவில் இருந்து கண்ட மக்கள் பதறினர்.
வனத்துறையை சேர்ந்த 30 பேர், அங்குள்ள பழங்குடி மக்கள் சிலரை அழைத்துக் கொண்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த போராட்டத்தில் தீயை அணைப்பதற்குள் பல ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து வனத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'கோடை காலத்தில் இது போன்று மலையில் தீ பிடிப்பது இயல்பு தான். ஆனால் இது அப்படி இயற்கையாக நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆடு, மாடு மேய்க்க சென்ற நபர்கள் மூலம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது' என்றார்.
சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால், 'இந்த தீ விபத்தினால் சுமார் ஐம்பது ஏக்கர் வனப்பகுதி வரை தீயால் எரிந்து நாசமாகியுள்ளன. மனிதர்கள் யாரும் மலை உச்சியில் இல்லாத காரணத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், விலங்குகளின் நடமாட்டமும் அப்பகுதியில் அதிகம் இல்லை. சீமார் புல் போன்றவை மட்டும் தான் எரிந்து போயுள்ளன' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...
- 1. டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 2. யாரை டின்னருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என ரசிகர்களின் கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அதிரடி பதில்!
- 'பறிமுதல்' செய்யப்பட்ட 'வாகனங்களை' திரும்ப 'பெற்றுக் கொள்ளலாம்...' 'காவல்துறை சார்பில் அறிவிப்பு...' 'வழிமுறைகள் குறித்தும் விளக்கம்...'
- கொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள் எவை?... மத்திய அரசு 'அறிவிப்பு'...
- இத்தனை 'பிரச்சனை'லயும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு "குட் நியூஸ்" ... ஒரே மாவட்டத்தில் குணமடைந்த ''13 பேர்''... 'கரவொலி'யுடன் வழியனுப்பிய 'மருத்துவ பணியாளர்கள்'!
- 'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...
- 'தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில்...' 'வௌவால்களுக்கு கொரோனா தொற்று...' 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்...'
- தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! || மேலும் ரூ.1000 நிவாரணம் இவர்களுக்கும் மட்டும் - தமிழக முதல்வர் அறிவிப்பு! || பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களுக்கு உரை!
- "ஸ்கூல் 'ப்ரெண்ட்ஸ்'ங்க தான் புல் சப்போர்ட்" ... கொரோனாவின் பிடியில் "19 நாட்கள்" ... மீண்டு வந்த இளைஞரின் அனுபவம்!
- ‘24 மணிநேரமும் பம்பரமாய் சுழன்று வேலை’.. அசதியில் குப்பை வண்டியிலேயே தூங்கிய ‘தூய்மை பணிப்பெண்’.. நெஞ்சை நொறுக்கிய போட்டோ..!