வீட்டின் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட சிறுமி.. பதறிய பெற்றோர்.. சாதூர்யமாக செயல்பட்ட தீயணைப்பு அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஒரு வீட்டில் உள்பக்கமாக தாழிட்டுக்கொண்ட சிறுமியை சாதூர்யமாக செயல்பட்டு மீட்டிருக்கின்றனர் தீயணைப்புத்துறை அதிகாரிகள்.

Advertising
>
Advertising

Also Read | கன்று ஈனாமலேயே 24 நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு.. ஆசிர்வாதம் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்..!

பொதுவாக வீட்டில் குழந்தைகளை வளர்ப்பதே மிகவும் சவாலான காரியம். எப்போதும் அவர்களை கண்காணிப்பிலேயே வைத்திருப்பது மிகவும் முக்கியம். சிறிய தவறுகள் கூட மிகப்பெரும் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் சென்னையில் சிறுமி ஒருவர் வீட்டிற்குள் இருந்தபடி தாழிட்டுக்கொள்ள, வெளியே நின்றிருந்த பெற்றோரால் குழந்தையை மீட்க முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த வீரர்கள் சாதூர்யமாக செயல்பட்டு குழந்தையை மீட்டிருக்கின்றனர்.

சென்னை பாடி டி.எம்.பி நகரை சேர்ந்தவர் திருமலை. இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமலைக்கு திருமணமாகி ரித்திகா எனும் மகள் இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்குள் இருந்த ரித்திகா, விளையாட்டாக கதவை தாழிட்டிருக்கிறார். அது ஆட்டோமேட்டிக் லாக் என்பதால் உள்ளே தாழிடப்பட்டதால் வெளியே இருந்த திருமலை மற்றும் அவருடைய மனைவியால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதனிடையே, சிறுமி ரித்திகா அழ, பதற்றமடைந்த பெற்றோர் பல்வேறு வகைகளில் தங்களது மகளை மீட்க முயற்சித்திருக்கின்றனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் தீயணைப்புத்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உள்ளே சிக்கியிருந்த சிறுமியிடம் சாதூர்யமாக பேச்சுக்கொடுத்து தீயணைப்புத்துறை அதிகாரி, சமாதானப்படுத்த, அந்த நேரத்தில் வீரர்கள் கதவை திறந்து உள்ளே சென்றனர். இறுதியில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, திருமலை மற்றும் அவரது மனைவி ஆனந்த கண்ணீருடன் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பூட்டிய வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுமியை சாதூர்யமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்புத்துறை வீரர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டியதோடு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Also Read | "என்னோட பிளான் இதுதான்".. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் சொல்லிய பகீர் தகவல்.. பரபரப்பு வீடியோ..!

FIRE DEPARTMENT, RESCUE, GIRL, HOUSE, தீயணைப்புத்துறை அதிகாரிகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்