VIDEO: 'பஸ் டிப்போவில் திடீர் தீ விபத்து'.. எரிந்து நாசமான பேருந்துகள்.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பேருந்துகள் அந்தந்த போக்குவரத்து கழகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பணிமனையில் நூறுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதில் ஒரு பேருந்தில் இருந்து திடீரென தீப்பற்றியுள்ளது. காற்றில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அடுத்தடுத்த பேருந்துகளில் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்துகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் 6 பேருந்துகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து பேருந்தில் இருக்கும் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி  இருக்கலாம் என கூறப்படுகிறது. ஊரடங்கு சமயத்தில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FIREACCIDENT, PUDUKKOTTAI, BUSDEPOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்