ஆன்லைன் புக்கிங்.. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் இதை செஞ்சா அபராதம்.. அதிரடி காட்டிய போக்குவரத்து காவல்துறை.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் முன்பதிவை ரத்து செய்யும் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அவர் வந்த அப்பறம் தான் என் மகனோட வாழ்க்கையே மாறிடுச்சு".. தினேஷ் கார்த்திக் தந்தை உருக்கம்.. யார் இந்த அபிஷேக் நாயர்..?

இணையம் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில், அதன் பலனாக பல்வேறு துறைகள் முன்னேறியுள்ளன. அந்த வகையில் போக்குவரத்து துறை பெரும் மாற்றங்களை சந்தித்துவருகிறது. பயணம் செய்ய விரும்பும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே தங்களுக்கு தேவையான ஆட்டோ மற்றும் டாக்சிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மேலும், அதற்கான பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தியும் விடலாம். ஆனால், தமிழகத்தில் சமீப காலங்களில் ஆன்லைன் பயண விரும்பிகள் சில இடர்பாடுகளை சந்தித்து வந்திருக்கின்றனர்.

அதாவது, ஆன்லைனில் ஆட்டோ அல்லது டாக்சியை பயனர் புக் செய்தபிறகு குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்ல டிரைவர்கள் சிலர் மறுப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த சூழ்நிலையில் டிரைவர்களே முன்பதிவை கேன்சல் செய்து விடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதேவேளையில், ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது டிரைவர்கள் பிக்கப் பாய்ண்டிற்கு வருவது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த சிக்கலை சரிசெய்ய போக்குவரத்து காவல்துறை களத்தில் இறங்கியுள்ளது. அதன்படி, ஆப்கள் மூலம் பயண முன்பதிவு செய்யும்போது கார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ரத்து செய்தால் மோட்டர் வாகன சட்டம் 1988ன் பிரிவு 178(3)பி-யின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் பயணிகளை ஏற்றி செல்ல மறுத்தால் சட்ட பிரிவு 178(3) ஏ-யின் கீழ் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்த ஸ்பாட் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் S.பாலசுப்ரமணியம்,"மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019-ஐ அமல்படுத்துவதனால் தவறு செய்யும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது தவறு இல்லை. ஆனால், தவறு செய்யாத ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்பட கூடாது. ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

Also Read | இந்தா வந்துட்டோம்ல... ட்விட்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த எலான் மஸ்க்.. அவர் தூக்கிட்டு வந்த பொருளை பத்திதான் உலகமே பேசுது.. வைரல் வீடியோ..!

AUTO, TAXI, DRIVERS, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்