'மட்டன் கறிக்கு இவ்ளோ தான் ரேட்டா...?, டவுட்டா இருக்கே...!' 'என்ன காரணம் தெரியுமா...?' 500 கிலோ ஆட்டுக்கறி குழி தோண்டி புதைத்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் ஆட்டுக்கறி பாதி விலைக்கு குறைவாக விற்கப்பட்ட நிலையில், சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய போது நோய்வாய்ப்பட்ட ஆட்டுக்கறியை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

சேலத்தில் ஆட்டு இறைச்சி பொதுவாக கிலோ 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் வெறும் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்கப்படுவதால் சந்தேகமடைந்த சிலர் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 8 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்துவரப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சி 500 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டது.

நோய்வாய்ப்பட்ட நிலையில் நின்ற இரு ஆடுகளை பிடித்த அதிகாரிகள், அதனை கால்நடை மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பினர். சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சியை தொடர்ந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களை எச்சரித்தனர்.

நல்ல தரமான இறைச்சியை விற்க அனுமதித்ததால் தொடர்ந்து ஆட்டிறைச்சி விற்பனை நடந்தது. நோய்வாய்ப்பட்ட 500 கிலோ ஆட்டிறைச்சியும் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

MUTTON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்