அரியர் போட்டு 30 வருஷம் ஆச்சா...? 'பரவாயில்லை, இன்னும் வாய்ப்புகள் இருக்கு...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலைகழகம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 2019ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் பலருக்கு கவலை விளைவிக்கும் வகையில் இருந்தாலும், மாணவர்களுக்கு ஒரு லக்கிசாமாக உள்ளது எனலாம்.

9-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ், கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சி மற்றும் அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் போன்ற சம்பவங்கள் நடந்தது.

என்னதான் இப்படியான அறிவிப்புகள் வெளிவந்தாலும் கட்டாயமாக தேர்வு வைக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 1990 முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதியாக 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு பிற பொறியியல் கல்லூரிகள், தொலைதூரக் கல்வியில் கடந்த 2001 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் இறுதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

அரியர் வைத்த மாணவர்கள் ஆகஸ்ட்- செப்டம்பர் 2021, பிப்ரவரி 2022, ஆகஸ்ட் 2022 ஆகிய மூன்று செமஸ்டர்களில் தேர்வு எழுதலாம் எனவும், கடைசி வாய்ப்பான இதனை பயன்படுத்தி அரியர் பாடங்களில் தேர்ச்சி அடைந்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்