'டிசம்பர் 7 ஆம் தேதி முதல்’... ‘இவங்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறப்பு’... ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, முதுநிலை பொறியில், கலை, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட மாணவர்களுக்கு டிசம்பர் 2-ம் தேதி வகுப்புகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு இளங்கலை படிப்புகளை டிசம்பர் 7 முதல் மீண்டும் திறப்பதாக தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வெளி ஊர்களில் இருந்து மற்ற இடங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம் பற்றிய கேள்வி எழும்பியது. கல்லூரிகளில் விடுதிகளின் வசதி இல்லாமல் அவர்கள் தங்குவது எங்கே? இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களை தங்க அனுமதிக்க விடுதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் கல்லூரிகள் டிசம்பர் 7 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய கல்வி ஆண்டு அதாவது, 2020-21 ஆம் ஆண்டிற்கான பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான துவக்கம் பிப்ரவரி 1 முதல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடுதிகள் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ‘ஊரடங்கு’ நீட்டிப்பு.. புதிய தளர்வுகள் என்னென்ன?.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
- Video: ‘அய்யா ஆசீர்வாதம் பண்ணுங்க’!.. சட்டென காலில் விழுந்த மணமக்கள்.. அடுத்த நொடியே முதல்வர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!
- தொடர்ந்து 3 வருஷமாக ‘முதலிடம்’.. சாதனை படைத்த ‘தமிழ்நாடு’.. பெருமையோடு ‘முதல்வர்’ பதிவிட்ட ட்வீட்..!
- நிவர் புயலால் '200 ஏக்கர் நெல் பயிர்கள்.. வாழைத் தோப்புகள் நாசம்!'.. 'உடனே கடலூர் விரைந்து' நிவாரணங்களை வழங்கிய தமிழக முதல்வர்!
- ‘புயல் முடிந்ததும்’... ‘நெட்டிசன் வைத்த கோரிக்கை’... ‘உடனடியாக ட்விட்டரில் பதில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’...!!!
- 'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?!!'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!!!'...
- '16 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை!!!'... 'நிவர் புயல் எதிரொலியால்'... 'தமிழக அரசு அறிவிப்பு!'...
- ‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும்’... ‘இவங்களுக்குத்தான் முதல்கட்டமாக வழங்க திட்டம்’... ‘தீவிரமாக தயாராகும் பணிகள்’... ‘வெளியான தகவல்’...!!!
- ‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
- "மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!.. 'திமுக'வுக்கு பதிலடி!