தமிழகத்தில் 'நான்கு' மாவட்டங்களை தொடர்ந்து... ஐந்தாவது மாவட்டத்திற்கும் முழு 'ஊரடங்கு' அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 19 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளைமுதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மூலம் 705 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை கடுமையாக உள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல தடையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியாவற்றை கடும் கட்டுப்பாடுகளுடன் காலை ஆரிய மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஹோட்டலில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்