‘தற்காலிகமாக மூடிய பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்’... ‘காரணம் இதுதான்’... விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தற்காலிகமாக மூடப்பட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம், வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாஃப்ட்வேர் நிறுவனம் எஸ்ஏபி (SAP). இந்த நிறுவனதின் பெங்களூரு கிளையில் பணியாற்றும் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் (H1N1) வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மும்பை, குருகிராம் பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் இந்த அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள், 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அதாவது மறு உத்தரவு வரை, வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தங்களது ஊழியர்களின் உடல்நிலைதான் முக்கியம் என்று கூறியுள்ள எஸ்ஏபி நிறுவனம், உங்களது வீட்டில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், அதன் தாக்கம் உலக நிறுவனங்களை பீதி அடைய செய்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் வர்த்தக மீட்டிங்கை தள்ளி வைத்து வருகின்றன.

BENGALURU, SOFTWARE, COMPANY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்