ஹாஸ்டல் ரூமில்... விபரீத முடிவு எடுத்த மாணவி... உறைந்து நின்ற பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நிவேதிதா (23). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தாவரவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி சேர்ந்ததிலிருந்தே நிவேதிதா, பல்கலைக்கழகத்தின் விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் மாணவியர்கள், விடுதி காப்பாளருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இரவு 10:00 மணிக்கு, மாணவியின் தந்தை திருமலை, தாய் செந்தமிழ்ச்செல்வி ஓடி வந்தனர். மாணவியின் உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அதன்பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக மாணவியின் உடலை, மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் மாணவி நிவேதிதாவுக்கு, அவரது துறையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக விடுதி முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒவ்வொரு ‘பாகமாக’ செயலிழந்த பரிதாபம்.. ‘இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது’... ‘தீரா’ சோகத்திலும் ‘பெற்றோர்’ செய்த காரியம்...
- 'கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம் டா'... 'True caller' மூலம் நம்பரை தூக்கிய இளைஞர்'... பகீர் சம்பவம்!
- ஆசிரியர்களால்... 10-ம் வகுப்பு மாணவிக்கு வந்த சோகம்... அதிர்ந்து நின்ற ஊர் மக்கள்!
- “கடனில் தத்தளித்த அப்பா!”.. “காதலனின் எதிர்பாராத செயல்”.. “என்ஜினியரிங் மாணவி எடுத்த சோக முடிவு!”
- ‘ஆஸ்திரேலியால வேலை வாங்கித் தரேன்’!.. ‘6 பெண்களுடன் கல்யாணம்’.. கண்பார்வை இல்லாதவரின் பகீர் வாக்குமூலம்..!
- 'நண்பனால் வந்த பிரச்சனை'...'வேற வழி தெரியல சாமி'... 'மொட்டை அடித்த தாய்'... நெஞ்சை உருக்கும் சோகம்!
- 'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'?... பரபரப்பு நிமிடங்கள்!
- #WATCH #VIDEO: அசுர வேகத்தில் வந்த... தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்துகள்... நேருக்கு நேர் மோதியதில்... அலறித் துடித்த மாணவ, மாணவிகள்... பதறவைக்கும் வீடியோ!
- வீட்டை விட்டு வெளியேறிய... இளம் காதல் ஜோடிகள்... எடுத்த விபரீத முடிவு... உறைந்து நின்ற பெற்றோர்!
- ஆசிரியை உதவியுடன் டியூஷன் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்.. பாய்ந்தது குண்டர் சட்டம்!