'சட்டையை' கொத்தாக பிடித்து 'இழுத்துச்' சென்று... 'புகார்' கொடுக்க வந்தவருக்கு 'அதிர்ச்சி' மேல் அதிர்ச்சி... 'புரியாமல்' புலம்பிய 'வாலிபர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த வாலிபர் மீது பெண் தலைமைக் காவலர் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதோடு, இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும் தலையிட்டுள்ளது.

கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவர் அங்கு புகார் அளிக்க வந்த வாலிபர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் புகார் அளிக்க வந்தவரின் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் பெண் ஏட்டு கிருஷ்ணவேணி அநாகரீகமாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு ஏட்டு கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில் புகார் அளிக்க வந்தவரை தாக்கிய பெண் தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி குறித்து விசாரித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண் தலைமைக் காவலரிடம் இன்று விசாரணை தொடங்கியது.

FEMALE POLICE, ATTACKED, COMPLAINANT, HUMAN RIGHTS COMMISSION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்