'கிட்ட நின்னா டேஞ்சர், எதுக்கு வம்பு... பத்தடி தள்ளியே நிற்போம்...' 'அவங்களுக்கு கண்டிப்பா கொரோனா இருக்கும்... ' வெளிநாட்டினரை கண்டு பயந்த மக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பீதியால் பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்த வெளிநாட்டு மக்களை கண்டு பயந்து ஒதுங்கிய சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களாக உலக மக்கள் அனைவரையும் ஒரு வித அச்சத்தோடு நடமாட வைத்துள்ளது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ். சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவிய இந்த வைரசால் இதுவரை 173286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 6668 பேர் இறந்துள்ளனர்,  77789 பேர் சிகிச்சை பெற்று கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் பயத்தால் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் அந்த ஊர் மக்கள் செய்த செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புருனோ மற்றும் ரோஸ்லின் ஆகிய இரு வெளிநாட்டவர் சென்னை செல்வதற்காக திருவள்ளூரில் உள்ள திருவிக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். இவர்களை கண்ட பேருந்து நிலையத்தில் இருந்த மக்கள் இவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கும் என்றும், அவர்கள் அருகில் நின்றுக் கொண்டிருந்தால் அது தங்களுக்கு பரவும் என்று பயந்து தள்ளியே நின்று கொண்டிருந்தனர்.

மேலும் அங்கிருந்த பொது மக்களில் சிலர் காவல் நிலையத்திற்கும் தகவல் சொல்லியுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் விசாரித்தனர். அதில் அவர்கள் 2 மாதத்திற்கு முன்பு பிரான்சிலிருந்து வந்ததாகவும், சென்னைக்கு செல்ல இருப்பதாகவும் கூறினர்.

அதன் பிறகு வெளிநாட்டவர் இருவருக்கும் முக கவசத்தை அணிவிக்க செய்த அதிகாரிகள், பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்