தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மழை பெய்யாத இடங்களில் வெப்பமானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி, குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக் கூடும்.
மேலும் வரும் 26-ம் தேதியன்று உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் கூடலூரில் 3 சென்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘5 வயது, 5 கிலோ மீட்டர், மெரினாவில் நீந்தி சாதித்த சிறுமி’.. குவியும் பாராட்டுக்கள்!
- 'இங்க ஏற்கனவே சுத்தமா இல்ல! அதுல இதுவேறயா'?.. அதிர வைக்கும் அறிவிப்பு!
- 'எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'... 'வீடியோ பதிவிட்டு இளைஞர் செய்த விபரீதம்'!
- 'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!
- மனைவி வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் கேட்காமல்.. 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய கணவர்..
- 'பைக்குக்கு வழிவிட சொன்ன மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை, மகன்'... பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!
- 'ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது'... 'அதிரடி உத்தரவு!'
- 'தொட்டில் சேலை கழுத்தில் இறுகி'... '11 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!
- 'சென்னையில் தீ விபத்து'... 'குடிசை வீடுகள் எரிந்து சோகம்'!
- 'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்!