'அறையில் கயிறு இல்ல!.. பேராசிரியர் பெயர் FIRல இல்ல!.. பாத்திமா தற்கொலை செஞ்ச மாதிரி இல்ல!'.. தந்தை பரபரப்பு பேட்டி. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன் மகள் ஃபாத்திமாவின் மரணம் தற்கொலையாக தெரியவில்லை என்று அவரது தந்தை அப்துல் லத்தீஃப் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடி வளாக விடுதியில் கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் பாத்திமாவின் மரணம் நாட்டையே அதிரவைத்தது. இதுகுறித்து போலீஸாரின் விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்நிலையில் சென்னை வந்து, தமிழ்நாடு டிஜிபியை சந்தித்து தன் மகளின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தார். 

அதன் பின் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தன் மகளின் தற்கொலைக்கான விளக்கம் தேவை என்றும், தன் மகளின் குறிப்பில் சுதர்சன் பத்மநாபன்தான் என்று எழுதப்பட்டிருப்பதாகவும், எந்த ஒரு காரியத்தையும் கடிதமாக எழுதிவைக்கும் பழக்கமுள்ள தன் மகள், இப்படி அவர் பெயரை குறிப்பிட்டுள்ளது பற்றி முதல் தகவல் அறிக்கையில் விளக்கம் இல்லை என்று கூறினார்.   மேலும், எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று நன்றாக படிக்கக் கூடிய தன் மகளுக்கு அதிக நெருக்கடிகளும் துன்புறுத்தல்களும் இருந்ததாக தன்னிடம் கூறியதாகவும், நவம்பர் 8-ஆம் தேதி இரவு கேண்டீனில் அமர்ந்து அழுததாகவும் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய லத்தீஃப், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் தன் மகளின் அறையில் கயிறும் இல்லை, அந்த அறை சீல் வைக்கப்படவும் இல்லை என்று கூறியதோடு, பாத்திமாவின் நிலை எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும், தன் மகளின் மரணத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறே உறுதியளித்துள்ள தமிழக அரசு மீதும் டிஜிபி மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

FATHIMALATHEEF, IITCHENNAI, FATHIMALATHIF

மற்ற செய்திகள்