விபத்தில் இறந்த மனைவி.. விஷயத்தை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை.. வீடு திரும்பியதும் கலங்கிய மாணவிகள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகள்கள் இருவரும் பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், வீட்டில் நடந்த துக்கம் ஒன்றை மறைத்து தந்தை செய்த செயல் ஒன்று, பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில், சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவரது மனைவி பெயர் முத்துமாரி. மேலும், பெரியசாமி - முத்துமாரி தம்பதியருக்கு வாணிஸ்ரீ, கலாராணி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

எதிர்பாராத நிகழ்வு

வாணி ஸ்ரீ மற்றும் கலாராணி ஆகிய இருவருக்கும், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே, தனது வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ப்பதற்காக, முத்துமாரி அப்பகுதியிலுள்ள சாலை அருகே கொண்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில், சாலையை ஆடுகள் கடந்த சமயத்தில், கார் ஒன்று வேகமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆடுகளை காப்பதற்காக சாலையின் குறுக்கே முத்துமாரி ஓடியதாக கூறப்படும் நிலையில், எதிர்பாராத விதமாக அந்த காரும் அவர் மீது மோதியுள்ளது.

தந்தை எடுத்த முடிவு

அதே போல, விபத்தில் சிக்கிய முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தும் போனார். தாய் இறந்தது மகள்களுக்கு தெரிந்தால், அவர்களள் தேர்வுக்கு தயார் ஆவது பாதிக்கப்படும் என்பதால், முத்துமாரிக்கு நடந்ததை பற்றி மகள்களிடம் மறைத்துள்ளார் பெரியசாமி. முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது வீட்டில் இருந்து படிக்க வேண்டாம் என்றும் கூறி, தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு மகள்களை பெரியசாமி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தந்தையின் சமயோஜிதம்

இதனைத் தொடர்ந்து, தேர்வு எழுத சென்ற வாணிஸ்ரீ மற்றும் கலாராணி ஆகியோர் திரும்ப வீட்டிற்கு வந்த பிறகு தான், தாய் இறந்து போனது பற்றிய விஷயம் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்ததும், இருவரும் ஊரார் முன்னிலையில் கதறி அழத் தொடங்கினார்கள். இந்த நிகழ்வு, அங்கிருந்தவர்கள் உள்ளத்தையும் கரையச் செய்துள்ளது.

தாயின் மறைவு, மகள்களின் கல்வியை பாதித்து விடக் கூடாது என்பதற்காக சமயோஜிதமாக செயல்பட்ட தந்தை பெரியசாமியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், முத்துமாரி மறைவுக்கும் அவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FATHER, MOTHER, EXAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்