'மணமாகி 25 நாள்ல மனைவி பிரிஞ்சுட்டா'.. 'ஆனாலும் நீ திருந்தலயா?'.. புதுமாப்பிள்ளையை கொன்ற தந்தை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி அருகில் உள்ள பூதிப்புரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த தங்கராஜுக்கு இரண்டு மகன்கள்.
அவர்களுள் ஒருவரான மலைச்சாமி என்பவர் சென்னையில் உள்ள பெரம்பூரில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஜோதி என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் தனது கணவர் மலைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்ததால், ஜோதி தனது தந்தை வீட்டுக்குச் சென்றதாகவும், இதனால் மலைச்சாமியின் தந்தை தங்கராஜ் மலைச்சாமியை கண்டித்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே, குடித்துவிட்டு மீண்டும் தன் வீட்டுக்கு வந்த மலைச்சாமி, மேலும் குடிப்பதற்காக வேண்டி தனது தந்தை தங்கராஜிடம் பணம் கேட்டு குடைச்சல் கொடுத்துள்ளார். ஆனால் பொறுமையை இழந்த தங்கராஜ், தனது மகன் என்றும் பாராமல், ஆத்திரத்தில் மலைச்சாமியின் கழுத்து, கை, மணிக்கட்டு என எல்லா இடத்திலேயும் சரமாரியாகக் குத்த, மலைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர், தனது கணவரை, அவரது தந்தையே குத்திக் கொன்றுவிட்டார் என்று ஜோதி கொடுத்த புகாரின் பேரில், தங்கராஜ் மீது பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மாவோட உறவ நிறுத்திக்கச் சொல்லி.. எவ்ளவோ சொன்னேன்'.. 'ஆத்திரத்தில் 19 வயது சிறுவன் செய்த காரியம்!'
- 'ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாரு.. அதான் காருக்குள்ளயே வெச்சு'.. பெண் உட்பட 4 பேரால் டிராவல்ஸ் டிரைவருக்கு நேர்ந்த கதி!
- 'என்னோட மதுபாட்டில எடுத்து ஏன் குடிச்ச'... 'தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்’!
- 'பணம் இருந்து என்னத்துக்கு ஆகுறது?'...'அம்மா'வ இந்த நிலையில பாக்க முடியல'...சென்னை என்ஜினீயரின் அதிரவைக்கும் முடிவு!
- ‘கடலில் சிக்கி உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்’.. ‘கண்ணீர் மல்க சல்யூட் அடித்து வீரவணக்கம் செய்த மகள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'தன்பாலின சேர்க்கைக்கு அழைத்தாரா?'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி!'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்!
- ‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..
- 'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்!
- '75 வயது தாயை செருப்பால் அடித்த மகன், மருமகள்'... 'நூதன தண்டனை கொடுத்த நீதிபதி'!
- ‘12 வயது சிறுமி கூறியதைக் கேட்டு’... ‘அதிர்ந்து போன ஆசிரியர்... ‘வீட்டில் தந்தை, நண்பர்களால் நேர்ந்த கொடூரம்’!