‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற குழந்தைகளை மலையில் இருந்து தள்ளி கொலை செய்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி-பாக்கியம் தம்பதியினர். இவர்களுக்கு கிரிதாஸ் (8), கவிதாராணி (5) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் மனைவி பாக்கியத்துடன் சிரஞ்சீவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நவம்பர் மாதம் செம்மேடு சீக்குபாறை பகுதியில் உள்ள ‘வியூ பாயிண்ட்’ மீது ஏறி தனது இரு குழந்தைகளையும் சுமார் 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.
இதனிடையே கணவர் மீது சந்தேகமடைந்த பாக்கியம், குழந்தைகளை காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சிரஞ்சீவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது குழந்தைகளை மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிரஞ்சீவி அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிரஞ்சீவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை தந்தையே மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!
- ‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- “பொங்கலுக்கு கரும்போட வந்துருங்க!”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்!
- ‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!
- ‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
- ‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...
- ‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- 'ஏன்டா நான் உனக்கு 'அப்பா'வா, இல்ல 'கல்யாண புரோக்கரா'?... 'வில்லனாக மாறிய தந்தை'!
- ‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!