'18 வயது ஆகாத மகனை பணத்துக்கு ஆசைப்பட்டு...' 'நல்ல பையனா சொல்லுங்க...' கார், நகை, பணம் என்ன வேணும் உங்களுக்கு...? அதான் நம்ம வீட்லையே... அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பணத்திற்கு ஆசைப்பட்டு 18 வயது கூட நிரம்பாத தன்னுடைய மகனை 28 வயதுடைய பெண்ணிற்கு ரெண்டாவது திருமணம் செய்ய முயன்ற தந்தையின் செயலை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Advertising
Advertising

வேலூரில் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு அவர்களின் பெற்றோர் மீண்டும் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மணமகன் பார்ப்பதற்கு வேலூரை அடுத்த அரியூர் கோவிந்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணனை அணுகியுள்ளனர். மேலும் வரப்போகும் மருமகனுக்கு வரதட்சணையாக நகை, பணம், கார் என எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். உங்களுக்குத் தெரிந்த நல்ல பையனாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் வைத்துள்ளனர்.

இதனால் மணமகன் பார்க்கும் படலத்தில் இறங்கிய போது தான் அவருக்கு விபரீதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருக்கும் மணிவண்ணனுக்கு இந்த கல்யாண விஷயம் தீனி போடும் வகையில் இருந்துள்ளது. இதனால் 18 வயதுகூட நிரம்பாத தன்னுடைய நான்காவது மகனை 28 வயது நிரம்பிய அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் மணிவண்ணனின் மூத்த மகன்கள் மற்றும் அவரது மனைவி இதற்கு சம்மதிக்கவில்லை. இவர்களின் சம்மதத்தை ஏதிர்பாக்காத மணிவண்ணன் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி பணியவைத்து, பெண் வீட்டாரிடம் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

நிச்சியதார்த்த வேளையில் இறங்கிய இரு வீட்டாரும், மே மாதம்12-ம் தேதி திருமணத்துக்கான தேதியையும் முடிவு செய்தனர். இன்னும் 18 வயது கூட நிரம்பாத தன்னுடைய மகனின் சம்மதம் இன்றி எங்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு விடுமோ என்று பயந்த சிறுவனின் தாய், கணவரின் செயல் குறித்து வேலூர் மாவட்ட சமூக நலத்துறைக்குப் புகார் தெரிவித்தார்.

சம்பவம் அறிந்த சமூக நலத்துறை அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியுடன் சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுவனுக்கு 18 வயது இன்னும் நிரம்பவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கிடையில் நடக்கவிருந்த நிச்சயதார்த்த நிகழ்வுகளை தடுத்து நிறுத்தினர்.

18 வயது கூட நிரம்பாத சிறுவனுக்கும் 28 வயதுடைய பெண்ணிற்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குழந்தை திருமணங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் போன்றவை பெண்களுக்கு மட்டும் நிகழும் என்று எண்ணும் சூழலில் இது ஒரு அதிர்ச்சியளிக்க கூடிய சம்பவமாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்