வாக்களிக்க சென்ற தந்தை, மகன்... பைக் மீது, தனியார் பேருந்து மோதி... நிகழ்ந்த கோர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் அருகே உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துவிட்டு இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பிக்கொண்டிருந்த, தந்தை, மகன் மீது, தனியார் பேருந்து மோதி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் இன்று முதல் கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (60). இவரது மகன் மோகன் (25). இவர்கள் இருவரும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற, தங்கள் சொந்த ஊரான ராமநாயக்கன் பட்டிக்கு வாக்களிப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர். இருவரும் வாக்களித்துவிட்டு பைக்கில், மீண்டும் வத்தலக்குண்டு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

பழைய வத்தலக்குண்டு பிரிவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வத்தலக்குண்டில் இருந்து தேனி நோக்கி சென்ற தனியார் பேருந்து, இவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் சாலையோரத்தில் தூக்கிவீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இவர்களின் இறந்த செய்தி கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: அசுரவேகத்தில் வந்த கார்... நொடியில் நடந்த விபத்தில் மாட்டி துடித்த நபர்... கொஞ்சமும் யோசிக்காமல் செய்த உதவி!

ACCIDENT, BIKE, PRIVATE, BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்