'4 வயசு சிறுமிக்கு முன்ன வச்சு...' 'அப்பா, அம்மா ரெண்டு பேரையும் துடிதுடிக்க...' ' உறைந்து நின்ற குழந்தை கடைசியில்...' குலைநடுங்க செய்யும் கொடூர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு காலத்திலும் வீடு புகுந்து 4 வயது சிறுமியின் முன் அவரின் அப்பா அம்மாவை சராமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் கரூர் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

'4 வயசு சிறுமிக்கு முன்ன வச்சு...' 'அப்பா, அம்மா ரெண்டு பேரையும் துடிதுடிக்க...' ' உறைந்து நின்ற குழந்தை கடைசியில்...' குலைநடுங்க செய்யும் கொடூர சம்பவம்...!

ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்யும் ரங்கநாதன் என்பவர் கரூர் மாவட்டம் மணவாடியை அடுத்த அய்யம்பாளையத்தில் தனது மனைவி தீபிகா, 4 வயது மகள், மனநிலை பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு (திங்கட்கிழமை) மர்மநபர்கள் சிலர் தீடீரென ரங்கநாதன் வீட்டுக்குள் புகுந்து ரங்கநாதனையும் அவரது மனைவி தீபிகாவையும் அவர்களது 4 வயது குழந்தையின் முன் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியின் குடியிருப்புகள் தனித்தனியாகவும், துரமாகவும் இருக்கின்றன காரணத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இவர்களின் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

குழந்தையின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் செய்வதறியாது விழித்திருந்த குழந்தை தந்தையின் செல்போன் எடுத்து டயல்ட் லிஸ்ட்ல் இருந்த உறவினருக்கு போன் பண்ணியுள்ளது.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் இரத்த வெள்ளத்தில் இருந்த தீபிகாவையும், ரங்கநாதனையும் பார்த்து அதிர்ந்த அவர்கள் சிறுமியையும் மீட்டு, போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரங்கநாதனுக்கும் அவரது சித்தி மகன்கள் 3 பேருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்