‘பட்டப்பகலில்’ மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பொங்கல் பண்டிகையன்று நெல்லையில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் நிலத்தகராறு காரணமாக மகள், தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வேடுவார் காலனியைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே காம்பவுண்ட் சுவர் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இதுதொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதில் தங்கமுத்துவுக்கு சாதகமாக இருந்துள்ளது. இதனால் பக்கத்துவீட்டுக்காரர் ஜெயராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் பொங்கல் பண்டிக்கைக்கு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடிக்கும் பணியில் தங்கமுத்து ஈடுபட்டு இருந்துள்ளார். அவருக்கு உதவிக்காக மூத்த மகள் சுமதி தனது 12 வயது மகன் ஜெகதீஷுடன் வந்துள்ளார்.
அப்போது அங்கே வந்த ஜெயராஜும் அவரது இரு மகன்களும் வீட்டில் வெள்ளையடித்துக்கொண்டு இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் சுமதியின் தலை மீது சுண்ணாம்பு கரைசலை கொட்டியுள்ளனர். வீட்டுக்குள் சத்தம் கேட்டு ஓடிவந்த தங்கமுத்துவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் சுண்ணாம்புக் கரைசல் கண்ணில் விழுந்து துடித்துக்கொண்டிருந்த சுமதியை அவரது மகன் கண்முன்னே கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து தப்பி ஓடியவர்களை சுமார் ஒரு மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் பொங்கல் பண்டிகை அன்று மகன் கண்முன்னே தாய், தாத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொழைக்க வந்த இடத்துல...' 'வடமாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்!'... 'விசாரனையில் போலீஸ் அதிர்ச்சி'...
- 'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!
- ‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- “பொங்கலுக்கு கரும்போட வந்துருங்க!”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!
- பர்த் டே விஷ் பண்ண வந்த பாட்டியம்மா... கலைந்து கிடந்த பொருட்கள்... 3 வயது குழந்தைக்கு... அம்மாவால் நிகழ்ந்த கொடூரம்... உறைந்து போக வைத்த சம்பவம்!
- ‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
- ‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...
- ‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...