'விளைவித்த காய்கறிகளை ரோட்டில் கொட்டி வேதனை...' 'சந்தைக்கு போக விட மாட்டோம்...' விவசாயிடம் மன்னிப்பு கேட்ட போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கால் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால் விவசாயி ஒருவர் காய்கறிகளை சாலையில் கொட்டி வேதனையை வெளிப்படுத்தியவரிடம், மாவட்ட எஸ்.பி அந்த விவசாயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அகரம் அருகேயுள்ள கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவர் தனது நிலத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்வதற்காக தனது பைக்கில் வைத்து சுமந்தபடி கோயம்பேடு சென்று கொண்டிருந்தார். வெங்கல் பகுதியில் வந்தபோது கார்த்தியை போலீசார் தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சந்தைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், விரக்தியடைந்த கார்த்தி காய்கறிகளை சாலையில் கொட்டி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர் காய்கறி விற்பனைக்காக அடிக்கடி சென்னை சென்று வருவதால் கொரோனா பரவும் அச்சம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததாக அவரை கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் காய்கறியை சாலையில் கொட்டி வேதனையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உடனே பாதிக்கப்பட்ட விவசாயியை நேரில் சந்தித்து, மாவட்ட எஸ்.பி அரவிந்தன் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்