Chellamma : “அவள மொதல்ல விரட்டிவிடுங்க.. செல்லம்மாவ கல்யாணம் பண்ணுங்க”.. அர்ணவிடம் சொல்லும் ரசிகைகள்.. வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் செல்லம்மா. இந்த சீரியலில் நாயகன் சித்து கேரக்டரில் அர்ணவ் நடிக்கிறார்.ன் நாயகி செல்லம்மா கேரக்டரில் அன்ஷிதா நடிக்கிறார்.
Also Read | அதிர்ச்சி! ஒரு மாதத்தில் திருமணம்.. சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!!
இந்த சீரியலில் செல்லம்மாவை ஒரு தலையாக சித்து காதலிக்க, இதனிடையே அவருக்கும் அவரது மாமன் மகளான மேகாவிற்கும் திருமண செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனாலும் நாயகன் சித்து, செல்லம்மாவை தான், தான் திருமணம் செய்து கொள்ள போவதாக ஆணித்தரமாகவும் உறுதியாகவும் இருந்து வந்தார். இந்த சீரியலில் மேகா கேரக்டரில் நடித்துவந்த நடிகை திவ்யா கணேஷ் தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்த சீரியலில், மேகா கேரகடரில் நடிகை ஸ்ரேயா நடிக்கத் தொடங்கியுள்ளார். சீரியல் நடிகை ஸ்ரேயா தற்போது மேகா கேரக்டரில் நடிக்க கூடிய எபிசோடுகள் தற்போது வரத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில்தான், சித்து - மேகா இருவருக்குமான திருமண ஏற்பாடுகள் இந்த சீரியலில் மும்மரமாக நடக்கிறது. கிட்டத்தட்ட இந்த சீரியலின் விறுவிறுப்பான கட்டம் இது என்பதால், இந்த சீரியலின் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த சீரியல் தற்போது மிகவும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியின் பல சீரியல்களை போலவே, செல்லம்மா சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இதனிடையே அண்மையில் நடந்த இந்த சீரியலின் படப்பிடிப்பு நடுவே, அர்ணவை சந்தித்த செல்லம்மா சீரியலின் ரசிகர்கள், சித்து கேரக்டர் சீக்கிரம் செல்லம்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மேகாவை வீட்டை விட்டு சீக்கிரம் வெளியே அனுப்ப கோரியுள்ளனர். அத்துடன் தனிப்பட்ட முறையில் நடிகர் அர்ணவைடும் ஒட்டுமொத்த சீரியல் நடிகர்களையும் பாராட்டியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சி வீடியோவை நடிகரும் இந்த சீரியலின் ஹீரோவுமான அர்ணவ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அமுதுவை உள்ளே போகச் சொன்ன ஜனனி.. 'ஃபேவரைட்டிஸமா'?.. ஷிவின் வைத்த விமர்சனம்..!! பரபரக்கும் Bigg Boss Tamil
- Rachitha : “இன்னும் 3 வருஷம்தான்.. அந்த ஒரு விஷயத்துக்கு..”.. குழந்தைகள் பற்றி பிக்பாஸில் ரச்சிதா உருக்கம்.! bigg boss 6
- பாக்யா ஜெயிச்சாச்சு!!.. கலவரமான கோபி முகம்.. சிங்கப்பெண்ணே Vibe-ல் தூக்கி கொண்டாடிய மகன்கள்.. baakiyalakshmi
- “எல்லாரும் எதிர்க்குறாங்க”.. “அப்ப நானுமா?..”- அசீமிடம் நியாயம் கேட்ட ஏடிகே ..மணிகண்டா கொடுத்த எண்ட் பஞ்ச்..! bigg boss 6
- "ஒண்ணா இருந்தாலும், எதிரும் புதிருமா இருந்தாலும் இது நமக்கு பொருந்தும்".. அரசியல் மொழியில் விக்ரமனிடம் பேசிய கமல்!!
- "ஃபினாலேவுல கமல் சார் என் பெயரை அறிவிச்சாரு" - அமுதவாணன் கண்ட கனவு.. "நானும் ஒரு கனவு கண்டேன்" - அழகாய் சொன்ன கமல் 😍
- அசீமை பிக்பாஸ்கிட்ட கோர்த்து விட்ட மைனா.. "டக்குன்னு திரும்பி, அசீம் சொன்ன விஷயத்த கேட்டு சிரிக்க ஆரம்பிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!
- “பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்”.. வேற லெவலில் எதிர்பார்த்த ரசிகர்கள் .. அடுத்த நொடி குயின்ஸி செய்த தரமான சம்பவம்.. bigg boss
- “நான் பண்ணது கொஞ்சம்தான்.. நேரம் இருந்தா ரச்சிதாவிடம் நிறைய Romance பண்ணிருப்பேன்.. ”.. bigg boss ராபர்ட் EXCLUSIVE
- “தொடல.. கட்டிப்பிடிக்கல.. க்ரஷ் மட்டும்தான்.. மனசுல என்ன இருக்குனு ரச்சிதா சொல்லணும்”.. ராபர்ட் EXCLUSIVE