"முகத்தில் மாஸ்க் கட்டியதால் மூச்சுத்திணறிய பச்சிளம் குழந்தை!".. 'குடும்பமே' சேர்ந்து செய்த 'விபரீத' டிக்டாக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பச்சிளம் குழந்தைக்கு முகத்தை மாஸ்க்கால் மூடியும், வாயில் எலும்புத் துண்டை வைத்தும் விபரீதமான முறையில் டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் வில்லங்க டிக்டாக் குடும்பத்தின் செயல் தமிழகத்தை அதிரவைத்துள்ளது.
ஓசூரில் டிக்டாக்கிற்கு அடிமையானதால், தங்களது வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைக்கு டிக்டாக்கில் லைக்ஸ் வரவேண்டும் என்பதற்காக படாத பாடு படுத்தி வந்துள்ளது ஒரு குடும்பம். அதில் பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையின் உதட்டில் லிப்ஸ்டிக் பூசியிருப்பது போல கிராபிக்ஸில் டிக்டாக் எடுத்தும் பின்னர், சமைத்த அசைவ உணவில் இருந்து மசாலாவுடன் கூடிய இறைச்சி ஒன்றின் பெரிய எலும்பு துண்டினை எடுத்து மல்லாக்க படுக்கவைக்கப்பட்ட குழந்தையின் வாயில் உறிஞ்ச வைத்து வீடியோவாக டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர்.
இந்த சேட்டையெல்லாம் தாண்டி, உச்சபட்சமாக கொரோனாவை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி, தங்கள் வீட்டில் உள்ள சிறுவன் மூலமாக அந்த குழந்தையின் முகத்தை துணி மாஸ்க்கால் இழுத்து மூடவும் வைத்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் மூச்சுவிடமுடியாமல் குழந்தை ஒன்று திணறி அழுக, அந்த சிறுவனோ சிரித்தபடியே குழந்தைக்கு மாஸ்க்கை கட்டிவிட, இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தலைக்கேறிய டிக்-டாக் மோகம்!.. பெற்ற குழந்தைகளை விடுத்து... கள்ளக்காதலனை தேடி ஓடிய பெண்!.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
- "வயதானவரை கவனித்துவந்த பெண்!".. அந்த வீட்டிலேயே நகை, பொருட்களை திருடிவிட்டு செய்த ‘பலே’ வேலை!
- "அது என்னடா பாவம் பண்ணுச்சு!".. தன் மோகத்துக்கு பூனையைத் தூக்கிலிட்டு இளைஞர் செய்த.. நடுங்கவைக்கும் காரியம்!
- டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..!
- ட்விட்டர் டிரெண்டிங்கில் #BanTikTokInIndia.. திடீர்னு PlayStore-ல் மளமளவென குறைந்த டிக்டாக்-ன் ‘ரேட்டிங்’.. என்ன காரணம்..?
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- “வேட்டைக்காரன் பரம்பரைடா.. வேட்டையாட வாரேண்டா!”.. 'உடும்பை' வேட்டையாடிவிட்டு 'இளைஞர்கள்' பார்த்த 'வேலை'!
- “டிக்டாக் மோகத்தால் சிக்கிய இந்த இளைஞரை நியாபகம் இருக்கா?”.. ‘இப்பவும் டிக்டாக்கை விடல.. ஆனா’.. நெகிழவைத்த காவல் ஆய்வாளர்!
- ‘டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கும் யூடியூப்’.. வெளியான அசத்தல் தகவல்..!
- 'கொரோனா வார்டில் டிக்டாக்...' செல்போன் யூஸ் பண்ணின 3 பேரையும் டிஸ்மிஸ் பண்ணியாச்சு, அதுமட்டுமில்ல...' அதிர்ச்சி சம்பவம்...!