'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்'.. 'கொடைரோடு ரயில் தண்டவாளத்தில்'.. 'சிதறிக் கிடந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில் நிலையம் அருகே சிதறிக்கிடந்த 4 பேரின் சடலங்களுக்கு அருகில் இருந்த ஆதார் மற்றும் டைரியை வைத்து, திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உத்தரபாரதி, சங்கீதா, அபினயஸ்ரீ, ஆகாஸ் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அதில் ஒருவரது பாக்கெட்டில் திருச்சியில் இருந்து கொடைரோட்டுக்கான ரயில் டிக்கெட்டும், கொடைரோட்டில் இருந்து கொடைக்கானல் சென்றதற்கான பஸ் டிக்கெட்டுகளும் இருந்துள்ளன. இதனை அடுத்து அவர்களின் சடலங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளதோடு, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

SUICIDEATTEMPT, DINDUGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்