'சொந்த வீட்டை' 17 வருடங்களாக.. 'பாம்புகளுக்கு' விட்டுக்கொடுத்த குடும்பம்.. இப்படியொரு காரணமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தங்களது சொந்த வீட்டை பாம்புகளுக்காக விட்டுக்கொடுத்து விட்டு வேறு ஒரு வீட்டில் குடும்பம் ஒன்று வசித்து வரும் சம்பவம் தஞ்சாவூரில் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் வசந்தி (36), இவரது தம்பி வெங்கட்ராஜன்(33) இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீட்டில் பாம்பு புற்று இருந்ததால் அந்த வீட்டை விட்டுவிட்டு கடந்த 17 வருடங்களாக வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வசந்தி கூறுகையில், ''பாம்பு புற்று உள்ள வீடு எங்களது பூர்வீக வீடு ஆகும். வீட்டின் உத்தரத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. எங்களது பெற்றோருக்கு, குடியிருக்கிற வீட்டில் நல்ல பாம்பு வருகிறதே? வீட்டில் பிள்ளைகள் இருக்கிறது என அதை அடித்து கொன்று விட்டனர்.

அதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து, வீட்டிற்குள்ளேயே மீண்டும் புற்று ஒன்று உருவாகி, நன்றாக பெரியதாகி விட்டது. அதில் நல்ல பாம்பு ஒன்று மீண்டும் வந்து விட்டது. ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. சரி, இனிமேல் நாம் பாம்பிற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என, எனது அம்மாவும், அப்பாவும் முடிவு செய்து, வீட்டை காலி செய்தனர்.

பாம்பு புற்றுக்கு மஞ்சள் தெளித்து வணங்கி வருகிறோம். இதை கேள்விப்படுபவர்கள் புற்றை இடித்துவிட்டு வீட்டை வாடகைக்கு விடுங்கள் என ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. தற்போது பாம்பு புற்றை மஞ்சள் தெளித்து, விளக்கு போட்டு பலரும் வணங்கி வருகிறார்கள்,'' என தெரிவித்து இருக்கிறார்.

SNAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்