புருஷன் 'வீட்டுக்கு' போக சொன்னேன் கேட்கல... நெல்லையில் சொந்த 'அண்ணனால்' தங்கைக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொந்த அண்ணனே தங்கையை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி(29). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன் மாரியப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். ராமலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக மாரியப்பன் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு எழுந்தது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் ராமலட்சுமி அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.
அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் சகோதரர் நயினார், தாய் பேச்சியம்மாள் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் கணவர் வீட்டுக்கு செல்ல ராமலட்சுமி மறுத்து விட்டார். இதற்கிடையில் தாய் பேச்சியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லுமாறு நயினார் சகோதரியை வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு ராமலட்சுமி மறுப்பு தெரிவிக்க ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து நயினார் அவரை கொலை செய்து விட்டார். தங்கை இறந்ததால் அச்சமடைந்த நயினார் தன்னுடைய உறவினர் மணிகண்டன் என்பவரிடம் இதுகுறித்து தெரிவிக்க, இருவரும் சேர்ந்து அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர்.
உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த பேச்சியம்மாள் மகள் உடலில் காயங்கள் இருந்ததாக போலீசில் தெரிவிக்க அவர்கள் இதை சந்தேக மரணமாக மாற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் நயினாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். தொடர்ந்து இதை கொலை வழக்காக மாற்றிய போலீசார் நயினார், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென கேட்ட 'வெடிச்சத்தம்'... 'இடிந்து' போய் கிடந்த வீட்டுக்குள்... மொத்த குடும்பமும் 'சடலமாக' கிடந்த அவலம்!
- 'இளநீர்' திருட்டு, 2 வழக்குகள்... தலை துண்டித்து 'கொலை' செய்யப்பட்ட.... 'கல்லூரி' மாணவர் வழக்கில் புதிய தகவல்கள்!
- 'சாய்ந்து' கிடந்த மோட்டார் பைக்... 'சடலமாக' தொங்கிய போலீஸ்காரர்... 'திருமணமான' 3 மாதங்களில் அதிர்ச்சி சம்பவம்!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
- 'உனக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைச்சுது'...'டேய் மச்சி ஒரே ஒரு சிப் கொடுடா'... 'பீர் தர மறுத்த நண்பன்'... நடந்து முடிந்த பயங்கரம்!
- பாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன?... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்!
- கணவனால் 'கைவிடப்பட்ட' இளம்பெண்களை மிரட்டி... ஆபாச படமெடுத்தவருக்கு... மருத்துவ பரிசோதனையில் 'காத்திருந்த' அதிர்ச்சி!
- 'பெத்த பொண்ண இப்படி செய்ய மனசு வலிக்கல?'... 'அந்த தகப்பனுக்கு இதுவா தண்டனை'?... 'யார் இந்த 'ரோமினா'.... தூக்கத்தில் நடந்த கொடூரம் என்ன?
- 'நிச்சயம் தான் முடிஞ்சு போச்சுல'... 'சந்தடி சாக்கில் மாப்பிள்ளை செஞ்ச பகீர் சம்பவம்'... பெண் வீட்டாருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த இளைஞர்!