“உங்க வீட்ல துப்பாக்கி இருக்குறதா தகவல் வந்திருக்கு.. சோதனை நடத்தணும்!”.. நண்பகலில் போலீஸ் வாகனத்தில் வந்த 8 பேர்!.. பக்கத்து வீட்லேயே குடியிருந்த ‘வினை’.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அசோக்நகரில் பாண்டியன் எனும் தொழிலதிபர் வீட்டுக்குள் போலீஸ் என்று பொய் சொல்லி நுழைந்த கும்பல், நகை, பணம், கார் ஆகியவற்றை கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது.

பிற்பகல் நேரமாக பார்த்து, பண்டியனின் வீட்டுக்கு காரில் வந்த 8 பேர், தங்களை, போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பாண்டியனிடம் “உங்க வீட்டுல துப்பாக்கி இருக்குறதா எங்களுக்கு புகார் வந்திருக்கு.. அதனால வீட்டுல சோதனை நடத்தி வேண்டும்” என்று கூறி, பாண்டியன் மற்றும் அவரின் குடும்பத்தினரை அந்த நபர்கள் ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.

பின்னர் அந்த வீட்டிலிருந்து 43 சவரன் தங்க நகைகள், 12 லட்சம் ரூபாய், 3 செல்போன்கள், ஒரு கார் உள்ளிட்டவற்றைக் கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்றனர். நீண்ட நேரம் கழித்து, தப்பி வந்த பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சைபர் க்ரைம் உதவியோடும் ஆய்வு செய்தனர். அப்போது தான் அசோக்நகர்  சிவா(26), திருவொற்றியூர் ரவி (40), வந்தவாசி சதீஷ் (31), எடப்பாடி அஜித்குமார் (26) என தெரியவந்ததும், இவர்களை கைது செய்து 4 கார்கள், 4 செல்போன்கள், ஒரு பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன், இவர்கள் கொள்ளை அடித்த நகை மற்றும் பணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பாண்டியன் வீட்டருகில் குடியிருக்கும் சிவா (இணைப்பு படத்தில் இருப்பவர்) என்பவர்தான் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டவர் என்பதும்,  பூமிநாதன் என்பவர் இந்தச் சம்பவத்துக்கு மூளையாக இருந்தவர் என்பதும், போலீஸ் போல நடித்து கொள்ளை அடித்த இந்த கும்பல், காவல்துறை வாகனத்தையே பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்