'பாத்ரூம்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துச்சு...' 'கதவை தட்டி பார்த்தேன், உள்ள போய் பார்த்தா...' அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமங்கலம் அருகே போலி மருத்துவரை  அதிகாலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

'பாத்ரூம்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துச்சு...' 'கதவை தட்டி பார்த்தேன், உள்ள போய் பார்த்தா...' அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டிப் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்(67). 20 ஆண்டுகளுக்கு முன்   தன்னுடைய இளமைக்காலங்களில் ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். சொந்த ஊரில் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்கள் முன்பு பால்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலம்பட்டியில் குடியேறினார்.

எந்த வித தொழிலும் சரியாக கைக் கொடுக்காததால் தன்னை ஒரு மருத்துவர் எனச் சொல்லி ஊருக்குள் வைத்தியம் பார்த்து வந்துள்ளார். விவரம் அறிந்த ஊர் மக்கள் சிலர் இவரைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 3 முறை  போலி மருத்துவா் பிரிவில் கைது செய்துள்ளனா்.

கடந்த ஆண்டு மனைவியை இழந்த இவர் தனிமையில் அப்பகுதியிலேயே வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். பால்ராஜ் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு ஊர் மக்களிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிக்காலை 3 மணியளவில் பால்ராஜ் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்  கழிப்பறைக்கு வந்த போது பால்ராஜின் வீட்டில் விளக்கு எரிவதை பார்த்துள்ளார். ஏதாவது பிரச்சனையா என்று கேட்க கதவை தட்டி உள்ளே பார்க்கும் போது பால்ராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் பகுதி  போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் மற்றும் ஏதாவது இடப்பிரச்சனை காரணமாக கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FAKEDOCTOR

மற்ற செய்திகள்