'நண்பகலில்' வேலை செய்து கொண்டிருந்த 'பெண் ஊழியர்'... சடாரென 'கதவை' மூடிய 'டிடெக்டிவ்' செய்த காரியம்!".. 'விசாரணையில்' தெரியவந்த 'அதிர்ச்சி உண்மைகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை ஊமச்சிகுளம் அன்னை வேலு நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த். 28 வயதான இவர் மதுரை அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்கிற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தனது நிறுவனத்தில் பணிக்கு ஆள் வேண்டும் என்று 18 நாட்களுக்கு முன்பு இவர் விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்து ஒரு பெண் விண்ணப்பித்துள்ளார்.  ஆந்திராவை சேர்ந்த அந்த பெண் மதுரையைச் சேர்ந்த லோடுமேன் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக்கில் பழகி காதல் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை நேர்முகத்தேர்வில் கணேஷ் ஆனந்த் தனது நிறுவனத்தில் பணிபுரிவதற்காக தேர்வு செய்த நிலையில், அப்பெண் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் கடந்த மே 23-ஆம் தேதி அய்யர்பங்களாவிலுள்ள டிடெக்டிவ் நிறுவனத்திற்கு நேரில் சென்று பணிபுரிய போன இந்தப் பெண்ணிடம், மதியம் 12:30 மணி அளவில் அலுவலக கதவுகளை அடைத்து கணேஷ் ஆனந்த் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.‌ இதற்கு இந்தப்பெண் மறுப்பு தெரிவிக்கவே அங்கிருந்த கட்டையால் அப்பெண்ணை தாக்கி ஆடைகளை அவிழ்க்க முயற்சித்துள்ளார் அதற்கு மறுக்க ஊமைக் காயம் ஏற்படும் அளவுக்கு அடித்துள்ளார் கணேஷ் ஆனந்த். இந்த அடிக்கு பயந்து ஆடைகளை அந்தப் பெண் அவிழ்க்க அதை முழுவதுமாக கணேஷ் ஆனந்த் வீடியோ எடுத்ததோடு தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியும் அதையும் வெளியில் சொன்னால் கணவரைக் கொன்று விடுவதாகவும் கூறியுள்ளார்

எப்படியோ அங்கிருந்து தப்பி தன் கணவரிடம் சென்று அந்தப் பெண் நடந்த உண்மைகளை கூற ஆத்திரமடைந்த, அந்த கணவர் தனது நண்பர்களுடன் சென்று கணேஷ் ஆனந்த்தை தாக்கியுள்ளார் . இதனால் செல்லூர் காவல் நிலையத்தில் கணேஷ் ஆனந்த், அப்பெண்ணின் கணவர் மீது புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கணவரை கைது செய்யப்பட்ட பிறகு தனக்கும் கணேஷ் ஆனந்திடம் இருந்து அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்த அந்தப் பெண் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி புகார் செய்தார்.‌

இந்தப் புகாரின் அடிப்படையில் கணேஷ் ஆனந்திடம் விசாரணை நடத்திய போலீசார் பல உண்மைகளை கறந்தனர். அதன்படி, கணேஷ் ஆனந்த் முதலில் நகைக்கடை அலுவலகம் என்று கூறி ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் அந்த கடைக்கு அடிக்கடி பெண்கள் நடமாட்டம் இருந்ததால் சந்தேகமடைந்த அந்த காம்ப்ளக்சில் உள்ள பிற நிறுவனத்தை சேர்ந்த சிலர் கணேஷ் ஆனந்திடம் கேட்டபோது, தான் நடத்தி வருவது சினிமாவுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனம் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகும் சந்தேகம் நீடித்ததால் இறுதியில், தான் நடத்தி வருவது துப்பறியும் டிடெக்ட்வி ஏஜென்ஸி நிறுவனம் என்று கணேஷ் ஆனந்த் அனைவரிடமும் தெரிவித்துள்ளார். எனினும் அவருடைய நடவடிக்கைகளில் மீது சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கணேஷ் ஆனந்திடம் விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பெண் அளித்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்ததோடு கணேஷ் ஆனந்தை கைது செய்து அவருடைய மொபைலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு முன் அங்கு பணியாற்றிய பெண்களிடம் துப்பறிவு என்கிற பெயரில் மிரட்டி கணேஷ் ஆனந்த் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டாரா என்கிற கோணத்திலும் விசாரணை வளையத்தை தல்லாகுளம் போலீசார் விரித்துள்ளனர்.

இணைப்புப் படம்: சித்தரிப்புப் படம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்