“குறைஞ்ச வட்டியில கடன்!.. வங்கி விபரங்களை மட்டும் கொடுத்தா போதும்!”.. கால் சென்டரில் இருந்து பேசும் பட்டதாரி பெண்கள்! சென்னையை அதிரவைத்த மோசடி கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல நிதி நிறுவனங்களின் பெயர்களிலும் வங்கி நிறுவனங்களின் பெயர்களிலும் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் வங்கி விபரங்கள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மூலம் பெற்று பண மோசடி செய்த கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்று நடத்தி வந்த கால்சென்டர் கும்பலின் தலைவன் உள்ளிட்ட 14 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை திருமுல்லைவாயலில் பட்டதாரி பெண்களை வைத்து நடத்தப்பட்டு வந்த போலி கால் சென்டர் ஒன்றினை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து இந்த போலி கால்சென்டர் கும்பலின் தலைவர் உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்களிடம் எப்படி போனில் தொடர்பு கொண்டு, என்னவெல்லாம் பேசி மோசடி செய்கிறார்கள் என்று அங்கிருந்தவர்களை நடித்துக் காட்டச் சொல்லி போலீசார் வாக்குமூலம் எடுத்துக்கொண்டனர். பொது மக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பணத்திருட்டு மோசடிகளில் ஈடுபட்ட இந்த கும்பல் குறைந்த வட்டியில் ஒரே நாளில் வங்கி கடன் தருவதாக பொதுமக்களிடம் கூறி முதலில் ஆசைவார்த்தை காட்டுகிறது. பின்னர் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட அவர்களின் வங்கி விபரங்களில் இருந்து பணத்தை திருடுகிறது.
இந்த வழக்கில் இந்த கும்பலின் தலைவன் கோபி, நிர்வாகி வளர்மதி மற்றும் வளர்மதியின் கணவர் ஆண்டனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கோபி என்பவர் கடந்த வருடம் இதே மோசடி வேலைகளை செய்து கைது செய்யப்பட்டவர். பின்னர் ஒரு வருடம் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் இருந்த கோபி மீண்டும் வெளிவந்து தன் கைவரிசையை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி கால் செண்டர்களை இப்படி நடத்துவதில் மாஸ்டர் மைண்ட் என்று போலீஸாரால் புகழப்படும் கோபி கிருஷ்ணன், கொரோனா காலகட்டத்தில் பணம் தேவைப்பட்டதால், மீண்டும் போலி கால் சென்டரைத் தொடங்கியதாக கூறியிருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “தட்றோம்.. தூக்குறோம்!”.. ‘வேறலெவல்’ ப்ளான்களுடன் வந்த ‘கஞ்சா திருடர்கள்’! .. கடைசியில் காத்திருந்த ‘மரண’ பங்கம்!
- 'சென்னையில் நாளை (30-09-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
- ஆச ஆசையா 'ஃபோன்' ஆர்டர் பண்ணி,,.. பார்சல 'ஓப்பன்' பண்ணதுல,,.. வாலிபருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
- சென்னையில் புறநகர் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்!.. எங்கு வரை செல்லும்?.. எத்தனை முறை செயல்படும்?... முழு விவரம் உள்ளே
- திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்!.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்!
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்'... 'ஒரு ஏரியாகூட இப்போ அப்படி இல்ல'... 'மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!!'...
- தனிமையில் சந்திக்கும் ‘ஜோடிகள்’தான் டார்கெட்.. சிக்கிய ‘சென்னை’ வாலிபர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- 'இந்த' வாட்ச் உங்களிடம் இருக்கா?.. அப்போ ஈஸியா பயணம் செய்யலாம்!.. சென்னை மெட்ரோ ரயில் புதிய திட்டம்!.. முழு விவரம் உள்ளே
- 'டேய் யாருடா நீங்க, என் கடைல என்ன பண்றீங்க'... 'கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் நடந்த பலே சம்பவம்!