'தேர்தலில் 34 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள்'... 'தி.மு.கவில் இணைந்ததற்கு காரணம் என்ன'?... பத்ம பிரியா பரபரப்பு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தி.மு.கவில் இணைந்தது குறித்து பத்ம பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்துக் கடந்த 2019-ம் ஆண்டு பத்ம பிரியா பதிவிட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில்  வைரலானது. லட்சக்கணக்கானோர் அந்த வீடியோ பார்த்துப் பகிர்ந்தனர். அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த வீடியோ ட்ரெண்டானது. அதனையடுத்து, பா.ஜ.கவினர் பத்ம பிரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும் பத்ம பிரியா தெரிவித்தார். இதற்கிடையே அந்த வீடியோ மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நபராக பத்ம பிரியா மாறிய நிலையில், தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் இணைத்துக் கொண்டார். கட்சியில் மாநில சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 34,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. இதற்கிடையே தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்த விலகிய சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்று தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். தற்போது தி.மு.கவில் இணைந்தது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ‘அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன்.

பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன். அதன்படி, மக்கள் பணி செய்யத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மருத்துவர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்