ஒரு நீதிபதி பேரன் செய்ற காரியமா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..! இப்படி ஒரு நிலைமைக்கு என்ன காரணம்.. ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய வழக்கில் முன்னாள் நீதிபதி ஒருவரின் பேரன் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

அச்சோ! ஐரோப்பாவின் ராட்சத அணு உலையில் குண்டு வீசிய ரஷ்யா.. "செர்னோபில்-ல விட 10 மடங்கு".. எச்சரிக்கும் உக்ரைன்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!

சைக்கிள் திருட்டு

சென்னையின் அபிராமிபுரம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் விலை உயர்ந்த சைக்கிள்கள் சமீப காலமாக அதிக அளவில் திருடு போவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அபிராமிபுரத்தின் ஆர்கே நகரை சேர்ந்த வசந்த குமார் என்பவரின் வீட்டில் சைக்கிளை ஒருவர் திருடி இருக்கிறார். அங்கு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக சூளை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

38 வயதான சரவணனிடம் இருந்து ஏராளமான சைக்கிள்களை காவல்துறை கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜட்ஜ் பேரன்

சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் அளித்த வாக்குமூலத்தில் தான் முன்னாள் நீதிபதியின் பேரன் எனவும் தனது தந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை பொறியாளர் பணியில் இருந்தவர் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி படித்திருக்கும் சரவணன், கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணை விரும்பியதாகவும் இருவரும் வெவ்வேறு சாதியினர் என்பதால் காதல் கைகூடவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். காதல் தோல்வியினால், போதை பழக்கத்திற்கு ஆளான சரவணன், சில உணவு விடுதிகளில் வேலை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

தாய், தந்தை மறைவிற்கு பிறகு தனியாகவே இருந்த சரவணன், தொடர்ந்து குடி உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக தெரிவித்து இருக்கிறார்.

சொத்து

சென்னையில் தனது பெற்றோருக்கு சொந்தமான இடத்தை விற்றதில் கிடைத்த ஒன்றரை கோடி ரூபாயை தனது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்த சரவணன், தொழில் துவங்கியதில் அனைத்து பணத்தையும் இழந்துவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய சூழ்நிலையின் காரணமாகவே தான் இவ்வாறு செய்ததாக சரவணன் கூறியுள்ளார். முன்னாள் நீதிபதியின் பேரன் ஒருவர் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி இருப்பது சென்னையையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே வருஷம் தான்.. பணம் டபுள் ஆகிடும்.. நம்பிப்போன பெண்ணிற்கு நடந்த சோகம்..!

EX JUDGE, SON IN LAW, ARREST, CYCLE THEFT CASE, CHENNAI, ஜட்ஜ் பேரன், சைக்கிள் திருட்டு, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்