பாஜகவிற்கு தாவிய வழிகாட்டு குழு உறுப்பினர்.. அதிர்ச்சியில் அதிமுக-வினர்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுகவின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் சோழவந்தான் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான மாணிக்கம் திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இவர் ஓபிஎஸ்சின் ஆதரவாளராக கருதப்பட்டவர் ஆவார். இவர் திடீரென பாஜகவில் சேர்ந்தது ஏன் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்படுகிறது.

Advertising
>
Advertising

கடந்த சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அதிமுகவினரையே அசரவைத்தவர்.

ஆரம்ப காலங்களில் பொதுப்பணித்துறை கான்டராக்டராக பணியை தொடங்கியவர் தான் மாணிக்கம், கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் பெரும்பாலான ஒப்பந்த வேலைகளைச் செய்து வளர்ச்சி அடைந்தவர் ஆவார். அதன்பின்னர் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளராக மாறினார். அதிமுக ஆட்சியிலும் செல்வாக்கான கான்ட்ரக்டராக இருந்தார்.

இந்நிலையில் மதுரையில் பிரச்சாரக்கூட்டத்திற்காக பாண்டி கோயில் அருகே தன் நிலத்தைக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்ததார். இதனால் அவருக்கு 2016-ல் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் மாணிக்கத்திற்கு மதுரை புறநகர் அதிமுக மாவட்ட துணை செயலாளர் பதவியும் கிடைத்தது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓபிஎஸ் அணியில் இணைந்தவர். அதன்பின்னரும் அதிமுகவில் தொடர்ந்தார். சோழவந்தான் தொகுதியில் தோல்வியை சந்தித்தவருக்கு, அதிமுக-வில் வழிகாட்டும் குழு அமைக்கப்பட்ட போது அதில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை கான்ட்ராக்டரான மாணிக்கம், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து திமுகவில் சேர மாணிக்கம் முயற்சித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு திமுக வட்டாரத்தில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. அதனால், சில நாள்கள் அமைதியாக இருந்தவர், தற்போது பாஜக-வில் திடீரென இணைந்திருக்கிறார். மாணிக்கத்தின் கட்சித்தாவல் மதுரை அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்