கல்யாணம் முடிச்சிட்டு வர்ற வழியில்ல.. மனைவிக்கிட்ட கணவன் சொன்ன விஷயம்.. இப்படி ஒரு பிளானோடு தான் வந்து தாலி கட்டினாரா? மனைவி ஷாக்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் திருமணம் செய்து வைத்த தம்பதியின் கணவர் சிறிது நேரத்திலேயே கழட்டி விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கீழ எல்லாரும் நடுங்கிட்டு இருந்தப்போ.. மேடையில மட்டும் சீக்ரெட்டா ரெட் கார்பெட்டுக்கு அடியில.. சர்ச்சையான வடகொரிய அதிபர் தந்தையின் பிறந்த நாள்

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லட்சுமி (வயது 23) டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். மேலும், படிக்கும் காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக லட்சுமி  அவரது வீட்டு அருகில் உள்ள புருஷோத்தமன் என்பவது மகன் சின்னராசு என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

2 முறை கருக்கலைப்பு:

சின்னராசு, திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள அமேசான் விநியோகப் பிரிவில் வேலை செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் சின்னராசு லட்சுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், இதற்கு முன் லட்சுமி 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார்.  தற்போது, லட்சுமிக்கு சின்னராசுவின் வீட்டார் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதனை கேள்விப்பட்ட லட்சுமி சின்னராசுவின் பெற்றோரிடம் சென்று சின்னராசு தன்னை காதலித்ததாதகவும்,  தற்போது வேறு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என கேட்டதற்கு தகாக வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் லட்சுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம்:

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரிக்கும் போது சின்னராசு தன் தவறை உணர்ந்து திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  அதன்பின், ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி இருதரப்பு உறவினர்கள் ஒரு சிலர் முன்னிலையில் தாலி கட்டியுள்ளார் சின்னராசு. 

திருமணமான தம்பதிகள் இருவரும் தேவாலயத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற சின்னராசு மனைவி லட்சுமியை கீழே இறக்கிவிட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு  தலைமறைவானதால் லட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளிடம் புகார்:

அதோடு லட்சுமி கணவரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது சின்னராசு குடும்பத்தார் யாரும் இல்லாததால் மிகுந்த மன வேதனைக்குள்ளாகிய லட்சுமி இதுகுறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி திருவள்ளூர் எஸ்பி மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்திய ஜனநாயக மாத சங்கத்தின் நிர்வாகிகள் ஆதரவு:

காதலித்து ஏமாற்றி, காவல்துறையினரே திருமணம் செய்து வைத்த பின்னும் நடுரோட்டில் விட்டு சென்ற சின்னராசுவை கைது செய்யாமல் இருப்பதால் லட்சுமி  சின்னராசுவின் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக மாத சங்கத்தின் நிர்வாகிகள் மோகனா உள்ளிட்ட பலரும் ஆதரவு கொடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மெய்யூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாலியாக நீந்திக் கொண்டிருந்த நபர்.. கண் இமைக்கும் நேரத்துக்குள்ள.. கடற்கரையில நின்னவங்க அப்படியே உறைஞ்சு போய்ட்டாங்க

TIRUVALLUR, MARRIED COUPLE, ESCAPE, HUSBAND, திருவள்ளூர், கல்யாணம், கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்