மனைவியும் பிரிஞ்சு போய்ட்டா.. இப்போ காதலியும் இல்ல.. வீடியோ காலில் பேசிய படி. இளைஞர் எடுத்த முடிவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவியும் பிரிஞ்சு போய்ட்டா.. இப்போ காதலியும் இல்ல.. வீடியோ காலில் பேசிய படி. இளைஞர் எடுத்த முடிவு

Advertising
>
Advertising

கோபி : மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், காதலித்து வந்த பெண்ணும் கைவிட்டதால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், தலைக்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

பிரிந்த மனைவி

இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கணவர் ரியாஸை விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி, மகளை அழைத்துக் கொண்டு, பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில், மேனேஜராகவும், ரியாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அதிலிருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கோபிசெட்டிபாளையம் பஜனை தெருவில், ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, ரியாஸ் வேலை தேடி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேறு பெண்ணுடன் காதல்

இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவரை ரியாஸ் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான காரணத்தினாலும் ரியாஸ் விரக்தியில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, இரவு நேரத்தில் தன்னுடைய உறவினர் ஒருவருடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

விரக்தியில் இளைஞர்

அந்த சமயத்தில், தான் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், விரக்தியில் ரியாஸ் தெரிவித்துள்ளார். இதனால், எனது உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போகிறேன் என்றும் ரியாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த ரியாஸின் உறவினர், என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

தவறான முடிவு

தொடர்ந்து, ரியாஸை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், உறவினர் இறங்கியுள்ளார். ஆனால், வீடியோ காலில் இருக்கும் போதே, தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில், ரியாஸ் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால், செய்வதறியாமல் ரியாஸின் உறவினர் திகைத்துப் போன நிலையில், செல்போன் இணைப்பும் அந்த நேரத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜன்னல் வழியாக கண்ட காட்சி

தொடர்ந்து, ரியாஸின் உறவினர் மீண்டும் மீண்டும் அவருக்கு அழைத்துள்ளார். அப்போது, ரியாஸ் வீட்டின் அருகில் இருந்தவர்கள், அவரது அறையில், தொடர்ந்து தொலைபேசி அழைத்துக் கொண்டே இருந்ததால், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜன்னல் வழியாக அவர்கள் கண்ட கட்சி, அனைவரையும் உறைந்து போகச் செய்துள்ளது.

போலீசார் விசாரணை

தூக்கில் தொங்கிய படி, தனது உயிரை ரியாஸ் மாய்த்த நிலையில், இந்த சம்பவம் பற்றி, கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.உடனடியாக அங்கு வந்த போலீசார், ரியாஸின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காதலி மற்றும் மனைவி ஆகியோர் பிரிந்த விரக்தியில் இருந்த ஒருவர், தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

YOUTH, WIFE, LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்