'ஹலோ... நாங்க லண்டன்ல இருந்து கால் பண்றோம்!'... ஆன்லைன் மூலம் சம்பாதிக்க... ஆசை வார்த்தை காட்டிய ஈரோடு இன்ஜினியர்கள்!... கோடிக்கணக்கில் மோசடி... வேற லெவல் ஸ்கெட்ச்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இணையதளம் மூலம் போலீஸ்காரர் உட்பட பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய ஈரோடு என்ஜினீயர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவலராக பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சுரேஷ். அவரது நண்பர் பரமக்குடி அருள்ராஜன். இவர்கள் இருவரும் இணையதளத்தில் அந்நிய செலாவணி பணபரிமாற்றத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க விரும்பி உள்ளனர். இதுபற்றி இணையதளம் மூலம் அறிந்த லண்டனை சேர்ந்த அந்நிய செலாவணி பணபரிமாற்ற நிறுவனத்தினர் ஆன்டர்சன் மற்றும் அபிஸ் ஆகியோர், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக தங்களின் ஏஜெண்டுகளான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் பிரவீன்குமார் மற்றும் விசுவநாதன் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதை நம்பிய சுரேஷும், அருள்ராஜனும் அவர்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறியபடி, கடந்த ஆண்டு இணையதள வங்கிப் பரிவர்த்தனை மூலம் சிறிது, சிறிதாக சுரேஷ் ரூ.49.72 லட்சமும், அருள்ராஜன் ரூ. 7.50 லட்சமும் செலுத்தினர்.
இந்த சூழ்நிலையில் இவர்களின் கணினியை அடுத்தவர் கணினியில் இருந்து இயக்கும் தன்மை கொண்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி, அவர்களின் பணம் முழுவதையும், பிரவீன்குமார், விசுவநாதன் ஆகியோர் ஒரேநாளில் அபகரித்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இருவரது புகாரின் பேரில் எஸ்பி வீ. வருண்குமார் உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணை நடத்தி ஈரோட்டை சேர்ந்த பிரவீன்குமார், விஸ்வநாதனை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 9.70 லட்சம், 25 வங்கி அட்டைகள், 9 மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், பலரிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாயை மின்னணு பண பரிவர்த்தனையான மின்னணு காசு எனப்படும் பிட்காய்ன் வடிவில் வைத்துள்ளது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களின் மின்னணு முகவரியை வாங்கி அதில் இருந்து சுமார் ரூ.1 கோடிக்கான பிட்காய்ன் மதிப்புகளை போலீசார் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இவர்கள் இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொழுதுபோகலனு யாரும் இனி புலம்ப தேவையில்லை!'... வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் திட்டம்... பொதுமக்கள் அமோக வரவேற்பு!
- ‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- 'ஈரோட்டில்' வீடுகளில் முடக்கப்பட்ட '694 பேர்'... கைகளில் 'முத்திரை' குத்தப்பட்டிருக்கும் இவர்களை... வெளியில் 'பார்த்தால்' அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...
- 'பீகாருக்கு போய்ட்டு வந்து ஒரே சளி, இருமல்'... 'கவனிக்காமல் இருந்த மில் ஓனர்'... ஈரோட்டில் பரபரப்பு!
- 3 ‘தமிழக’ மாவட்டங்கள் உட்பட... நாடு முழுவதும் ‘75 மாவட்டங்கள்’... ‘மார்ச் 31’ வரை முற்றிலும் ‘முடக்கம்’...
- ‘இது கொரோனாவ விட கொடூரம்யா!’ .. ‘குடித்துவிட்டு நடுரோட்டில்.. போதைக்காரர்கள் செய்த அட்டூழியம்!’
- ‘நடுராத்திரி வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. ‘திடீரென உருட்டுக்கட்டையால் விழுந்த அடி’.. விவசாய தம்பதிக்கு நடந்த கொடுமை..!
- கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’...
- தாய்க்கு ‘மெசேஜ்’ அனுப்பிவிட்டு... ‘திருமணமான’ ஐந்தே ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த ‘முடிவு’... கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...