'ஏழைகளுக்கு' உதவிய 'சலூன் கடைக்காரரின் மகள்...' 'நேத்ராவுக்கு' முதல்வர் 'இ.பி.எஸ், வாழ்த்து...' 'உயர்கல்வி' செலவை 'அரசே ஏற்கும்' என 'அறிவிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதமர் மோடி, பாராட்டிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா, ஐ.நா. நல்லெண்ண தூராக நியமிக்கப்பட்டதற்கு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன்கடைக்கார் மோகன், தனதுமகள் படிப்பிற்காக சேமித்த, 5 லட்சம் ரூபாயை, மகள் விருப்பப்படி, ஊரடங்கில் தவித்த ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினார். இதை, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டினார்.
இதை தொடர்ந்து, ஐ.நா.நல்லெண்ண தூதராக மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல்வர் இ.பி.எஸ், வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்.
நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹலோ நேத்ராவா'... 'வீடு தேடி வந்த அழைப்பு'... 'மதுரை சலூன்' கடைக்காரரின் மகளுக்கு கிடைத்த கெளரவம்!
- தமிழகத்தில் அதிரவைத்த 'கொரோனா' பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... 'ஒரே' நாளில் '12 பேர்' பலி... முழு விவரம் உள்ளே!
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- 'அப்பா, அம்மாவால் ஆசிரியரான மகன்!'.. வீட்டை விட்டு விரட்டியதால் 'சுடுகாட்டிற்கு' சென்று 'கழுத்தை' அறுத்துக்கொண்ட 'வயதான பெற்றோர்'!.. 'போவதற்கு முன்' செய்த 'உருக்கமான' காரியம்!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- ‘வேறலெவல்’ தம்பி இந்தாங்க 1000 டாலர்.. Facebook-கை ‘அலெர்ட்’ பண்ணி பரிசை அள்ளிய மதுரை இளைஞர்..!
- ஒரே நாளில் தமிழகத்தில் 'பதிவான' அதிக 'பாதிப்பு'... 'ஆறு' பேர் பலி... முழு விவரம் உள்ளே!
- 'மர அறுவை' இயந்திரத்தில் சிக்கி... துண்டான 'கர்ப்பிணி' பெண்ணின் 'தலை'... மனதை 'நடுங்க' செய்யும் 'கோரம்'!
- தமிழகத்தில் '17' வெளிநாட்டு நிறுவனங்கள்... சுமார் 15 ஆயிரம் கோடிக்கு 'முதலீடு'... 'இத்தனை' பேருக்கு 'வேலை' கிடைக்குமாம்... தமிழக அரசின் செம 'பிளான்'!