"எப்புடுறா.?".. ஒரே வார்த்தையில் ட்ரெண்ட் ஆன சிறுவன்.. டெம்ப்ளேட் வெச்சு காவல்துறை போட்ட சூப்பர் பதிவு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக நம் சோசியல் மீடியாவில் அதிக நேரம் வலம் வரும்போது நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

அது மட்டுமில்லாமல், நாள்தோறும் என்னென்ன விஷயங்கள் வைரல் ஆவது என்பது குறித்தும் நாம் கவனிப்போம்.

அந்த வகையில் நாள்தோறும் ஏராளமான வைரல் வீடியோக்களும் மிக மிக வினோதமாக இருக்கும் விஷயங்களும் அதிகம் டிரெண்டாகி வரும்.

அப்படி தான், சமீபத்தில் சிறுவன் ஒருவன் மேஜிக் செய்வது போன்ற ஒரு வீடியோ பெரிய அளவில் மக்களை ஈர்த்திருந்தது. அதில் சிறுவன் ஒருவன் கையில் ரப்பர் பேண்ட் வைத்துக் கொண்டு இரண்டு விரலிலிருந்து அடுத்த இரண்டு விரல்களில் மாற்றுவது போல மேஜிக் செய்வது தொடர்பான வீடியோ வைரலானது. மேலும் அந்த வீடியோவில் ரப்பர் பேண்ட் அடுத்த இரண்டு விரல்களில் மாறியதும், "எப்புடுறா கையில வந்துட்டு" என அந்த சிறுவன் சூப்பராக சொல்லும் விஷயம் தான் இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து பேசும் அந்த சிறுவன், "இந்த வீடியோ பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, வீடியோவுக்கு நிறைய லைக் போடுங்க" என்றும் கூறுகிறார்.

"எப்புடுறா" என ஒரு வியப்புடன் அந்த சிறுவன் க்யூட்டாக சொல்லும் விஷயம் தற்போது மீம்ஸ் தொடங்கி பல விஷயங்களில் டிரெண்டாகியும் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், சிறுவன் 'எப்புடுறா' என சொல்லும் அந்த டெம்ப்ளேட் கொண்டு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதில் அந்த சிறுவன் கையில் போன் இருப்பது போல இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் முதல் புகைப்படத்தின் அருகே, "Verify செய்யப்படாத தளங்களில் உங்களின் பேங்க் விவரங்களை கொடுக்கும் போது" என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இதற்கு அடுத்தபடியாக கீழே அந்த சிறுவன் "எப்புடுறா" என சொல்லும் ரியாக்ஷன் புகைப்படத்துடன், "டேய் எப்படிடா எல்லா காசும் போயிட்டு" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதாவது சில சரிபார்க்கப்படாத போலி தளங்களில் நாம் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கொடுக்கும் போது வங்கி கணக்கும் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து பணம் எடுக்கப்படும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக தான் அந்த சிறுவனின் புகைப்படத்தை வைத்து விழிப்புணர்வு பதிவு ஒன்றை தஞ்சாவூர் மாவட்ட போலீசார் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தற்போது ட்ரெண்டில் இருக்கும் சிறுவனின் புகைப்படம் கொண்டு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் உருவாக்கி உள்ள விழிப்புணர்வு பதிவு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

EPPUDRA, THANJAVUR POLICE, AWARENESS, VIRAL BOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்