"வீடுகளில் 'சிவப்பு' நிறத்தில் 'ஆங்கில' எழுத்துக்கள்..." "இதுக்கு காரணம் அவங்களாத்தான் இருக்கும்..." 'பீதியில்' ஆழ்ந்துள்ள 'பொதுமக்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரத்தில் சில வீடுகளில் சிவப்பு நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடிக்கப் போகும் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் சிவப்பு நிறத்தில் ஏதேனும் குறியீட்டை இட்டுச் செல்வது வழக்கம். இதுபோன்ற வீடுகளை பல நாட்களாக கண்காணித்து கொள்ளையடிக்கத் தகுந்த இடம் என்பதை குறிக்கும் வகையில் இதுபோன்ற குறியீடுகளை கொள்ளையர்கள் வரைந்து செல்கின்றனர்.

தற்போது ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இதுபோன்ற சில குறியீடுகள் காணப்படுகின்றன. அங்குள்ள வீடுகளில் ஏ, பி, வி, எக்ஸ், என்ற ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

இதனால் குழப்பமடைந்த வீட்டு உரிமையாளர்கள் ஒரு வேளை நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற குறியீடுகளை எழுதியிருக்கலாமோ என்ற எண்ணத்தில், நகராட்சி நிர்வாகத்தினரிடம் விசாரித்தனர். அதற்கு அதிகாரிகள் தங்கள் சார்பில் எந்த குறியீடும் போடப்படவில்லை எனத் தெரிவித்தனர்.  இதனால் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட வீடுகளில் குறியீடுகளை எழுதி இருப்பார்களோ என பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

RAMANATHAPURAM, POLICE INVESTIGATE, RED LETTERS, HOMES, MUNICIPALITY, ROBBERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்