'சாலையோரம் கட்டப்பையில் கிடந்த பச்சிளங்குழந்தை'... 'பிறந்து 7 நாளே ஆன நிலையில் நடந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரம் கிடந்த பையில் அழுதுக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தையை, கல்லூரி மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள, தனியார் கல்லூரியில் படித்து வரும் ர்ந்த மணவர்கள் சந்திரசேகர் மற்றும் சத்தியதரன். இவர்கள் இருவரும் நேற்றிரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக் கல்லூரி சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் யாருமின்றி வெறிச்சோடி இருந்ததால் மாணவர்கள் சத்தம் வரும் இடத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் ஒரு கட்டப்பையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் பெற்றோர் யார், சாலையில் எப்படி குழந்தை வீசப்பட்டது, யாராவது கடத்தி வந்தபோது ஆட்கள் நடமாட்டத்தால் போட்டுச்சென்றார்களா என்பது குறித்து ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அட என்னா ஸ்பீடு”!.. ‘4 மணி நேரத்துல உலக சாதனை படைச்ச 7 வயது சிறுவன்’!
- 'சார் நான் இத படிக்கணும்னு சொன்னேன்'... 'ஆனா அவரு இதத்தான் படிக்கணும்னு சொல்ராரு'... 'தந்தைமீது போலீசிடம் புகாரளித்த மகள்'!
- 3-வது மாடியில் நின்றபடி 'செல்போன்' பேசிய பள்ளி மாணவி.. 'அஜாக்கிரதை'யால் நிகழ்ந்த சோகம்!
- வினையில் முடிந்த விளையாட்டு.. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!
- கனரக வாகனம் மீது கார் மோதி கோர விபத்து.. ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலி!
- “மண்ணை தின்றதால் உயிரிழந்த குழந்தையை வெளியில் தெரியாமல் மண்ணில் புதைத்த தம்பதியினர்”!.... பதற வைக்கும் காரணம்!
- இன்னாள் மாணவருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்! நெகிழும் ஓட்டப்பந்தய வீரர்!
- 'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்!
- துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை.. எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு.. உயிருக்கு போராடும் 11-ம் வகுப்பு மாணவி!
- கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. எரித்து, தொங்கவிடப்பட்ட துயரச் சம்பவம்.. புதிய திருப்பம்!