'புட் டெலிவரியை வச்சு என்ஜினீயர்கள் போட்ட பிளான்'... 'டெலிவரி பைக்குள் இருந்த சின்ன பார்சல்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் சென்னை என்ஜினீயரிங் பட்டதாரிகள் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆன்லைன் உணவு விற்பனை செய்யும் நபர்கள் மூலமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது தனியார் நிறுவன ஆன்லைன் உணவு வினியோக செய்யும் ஊழியர் விஜய் என்பவரது டெலிவரி பையை போலீசார் சோதனை செய்தார்கள்.

அதில் உணவு செய்வது போன்று கஞ்சாவும், சிகரெட்டில் வைத்து உபயோகிக்கும் கஞ்சா ஆயில், சிரஞ்சுகளும் ஒரு சிறிய பார்சலில் டெலிவரி பைக்குள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள். அதனைத்தொடர்ந்து விஜயை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அதே குடியிருப்பில் தங்கியுள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த புகழ், அவருடைய நண்பர்களான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், சென்னை அண்ணாநகரைச்சேர்ந்த நவோதித் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது தான் அவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்ற அதிர்ச்சி தகவல் காவல்துறைக்குத் தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் ஒன்றாகத் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரி ஆவர். புகழ் மற்றும் நவோதித்க்கு வேலை பறிபோன நிலையில்,  அருண் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார்.

இவர்கள் 3 பேரும் விலையுயர்ந்த கார் மூலம் ஆந்திரமாநிலம் நெல்லூர் சென்று கஞ்சா கடத்தி வந்து தனியார் ஆன்லைன் ஊழியர் விஜய் மூலம் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவற்றை வினியோகம் செய்துள்ளது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 10 மி.லி. அளவுள்ள கஞ்சா ஆயில், 16 சிரஞ்சுகள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அதே போன்று மற்றொரு சம்பவத்தில் ஆன்லைன் வாயிலாகவும், செல்போன் மூலமாகவும் கஞ்சா விற்பனை செய்த இரண்டு ஐடி என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்