‘இது நிரந்தர அரசாங்க வேலை’!.. ‘எப்போனாலும் லீவு எடுக்கலாம்’ துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த இன்ஜீனியரிங் பட்டதாரிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு இன்ஜீனியரிங், டிப்ளமோ பட்டதாரிகள் குவிந்தனர்.
கோவை மாநகராட்சியில் 2000 பேர் நிரந்தர துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் 500 பேர் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பங்களை கோவை மாநகராட்சி வரவேற்றது. இதற்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வேலைக்கான தகுதி, குறைந்தபட்ச வயது 21 என்றும், அதிகபட்ச வயது 56 என்றும், தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். மேலும் எஸ்.எஸ்.எல்.சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு, இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள், இன்ஜீனியரிங் பட்டதாரிகள் என பலர் குவிந்தனர்.
இதுகுறித்து தெரிவித்த பட்டதாரி ஒருவர், ‘நாங்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை இல்லை. அதனால் இந்த வேலைக்கு வந்துள்ளோம். தனியாரில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தான் தருகிறார்கள். ஆனால் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை வேலை செய்யவேண்டும். வேலையும் நிரந்தரம் இல்லை. ஆனால் துப்புரவு வேலைக்கு சேர்ந்தவுடனேயே 20 ஆயிரம் கொடுக்கிறார்கள். காலை 3 மணிநேரம், மாலை 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். இடைப்பட்ட நேரங்களில் வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம். எல்லாத்துக்கும் மேலாக இது நிரந்தர அரசாங்க வேலை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தேவைப்படும்போது விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொன்றுவிட்டு’.. ‘தாய் செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘கோவை அருகே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘அழகி பட்டம்’! ‘கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனு’.. ஆன்லைனில் ஆபாசமாக சித்தரித்து அவதூறு..! சிக்கிய ஈரோடு இளைஞர்..!
- ‘காய்ச்சலுக்கு போட்ட ஊசி’.. ‘வீட்டுக்கு போனதும் வந்த பயங்கர வலி’.. கோவை இளைஞருக்கு நடந்த கொடுமை..!
- 'காளையை போட்டு அமுக்கி 'டிக் டாக்' செஞ்ச இளைஞர்'...'கோவையில் நடந்த சோகம்'...அதிரவைக்கும் வீடியோ!
- ‘மயங்கி கிடந்த நாய்’! ‘உடைந்திருந்த கதவு’ குடும்பத்தோடு கோயிலுக்கு போய்விட்டு வந்த கோவை கான்ட்ராக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘யூ டர்ன் எடுத்த கார்’... ‘எதிரே வந்த பைக் மீது மோதியதில்’... 'இளைஞருக்கு நேர்ந்த சோகம்’!
- 'குழந்தையுடன் விளையாட போன தாய்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- மொத்தமாக 3000 பேரை.. 'வீட்டுக்கு' அனுப்பும் டாட்டா.. 'கலங்கும்' ஊழியர்கள்!
- 'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்!
- 'ரயில்வே டிராக்கில் போதை மயக்கம்'...'அதிவேகத்தில் வந்த ரயில்'...'அரியர் எக்ஸாம்' எழுத வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!