‘என்ஜினியரிங் மாணவர்கள்’... ‘இதை படித்திருந்தால் போதும்’... ‘டெட் தேர்வெழுதி’... 'ஸ்கூலில் கணக்கு டீச்சர் ஆகலாம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பி.இ. படிப்புக்கு சமநிலை அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் இனி டெட் (TET) எனும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் ஆகலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியே வருகின்றனர். இவர்களில் சிலருக்கே, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதற்கு உதாரணமாக, சமீபத்தில் கோவை மாநகராட்சியில் நடந்த துப்புரவு ஊழியர்களுக்கான பணிக்கு கூட, ஏராளமான என்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.எட். படித்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுபவர்கள், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, கணக்கு ஆசிரியர் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கலை அறிவியல் படிப்பை படித்தவர்கள் மட்டுமே பி.எட். படிக்கலாம் என்ற நிலை கடந்த 2015-2016-ம் கல்வியாண்டில் மாற்றப்பட்டு, பி.இ. படித்தவர்களுக்கும் பி.எட். படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும், டெட் தேர்வு எழுத தகுதி இல்லாததால், ஆசிரியர் ஆக முடியாத சூழ்நிலையில் இருந்தனர் பி.இ. மாணவர்கள். தற்போது சமநிலை அந்தஸ்து கொடுத்திருப்பதால், இனி அவர்களும் ஆசிரியர் ஆகலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..
- 'எங்க சண்ட ரொம்ப உக்ரமா இருக்கும்'...'மாணவிகளுக்குள் நடந்த சண்டை'... வைரலாகும் வீடியோ!
- ‘ட்ரெயினிங் இடைவேளையில்’... ‘நாகின் டான்ஸ் ஆடிய'... ‘கவர்மென்ட் டீச்சர்ஸ்’... ‘வைரலான வீடியோவால் நடந்த சோகம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'சீஸன் டிக்கெட் எடுத்து கைவரிசை'...'கடற்கரை, தாம்பரம் ரயில் தான் டார்கெட்'...சிக்கிய 'கல்லூரி மாணவி'!
- 'பசங்கள பள்ளிக்கு அனுப்ப பயமா இருக்கு'...'புத்தக அறையில் பாம்பு'...' மாணவனை கடித்த கொடூரம்'!
- 'கூகுள்' மேப்பில் பாதை கேட்டு.. நேராக போலீசிடம் 'சிக்கிய' மாணவர்கள்.. என்ன 'பண்ணாங்க' தெரியுமா?
- 'பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகள்'...'பிளான் போட்டு தூக்கிய டிரைவர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி!
- 'பரீட்சை'ல வாங்கிய மார்க் பூஜ்ஜியம்'...'சுந்தர் பிச்சை' கொடுத்த சர்ப்ரைஸ்'...இன்ப அதிர்ச்சியில் மாணவி !
- 'இப்படி உருக வச்சிட்டியே தம்பி'...'ஒரே ஒரு 'லெட்டரில்' வைரலான மாணவன்'.. வைரலாகும் லெட்டர்!