“லவ் பண்ணிட்டு, இப்படி பண்ணிட்டா!”.. காதல் முறிந்த விரக்தியில் பேஸ்புக்கில் இன்ஜீனியர் பார்த்த வேலை!.. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பறந்த ஆபாச போன் அழைப்புகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் பெண்களுக்கு 24 மணி நேரமும் ஆபாச போன் அழைப்புகள் வந்ததை அடுத்து அந்த பெண்கள் மனதளவில் பாதிக்கப் பட்டனர். பின்னர் இதுகுறித்து அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் சைபர் கிரைம் உதவியுடன் சம்பந்தப்பட்ட பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்த போலீசார், அந்த பேஸ்புக் கணக்கு ஓரகடம் பகுதியில் குடியிருக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் பெயரில் போலியாக தொடங்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் ஒரு மாணவி குறித்த விவரங்களும் அந்த பகுதியை சேர்ந்த சில பெண்களின் செல்போன் நம்பர்களும் சித்தரிக்கப்பட்ட பல புகைப்பட பதிவுகளும் இருந்தன.

ஆனால் அந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் உள்ள பெண்களின் செல்போன் நம்பர்கள் எப்படி அந்த பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டன என்பது போலீசாரால் விசாரிக்கப்பட்டது. அப்போது மாணவி அளித்த தகவலின்படி ஓரகடம் பகுதியில் குடியிருக்கும் இன்ஜினியர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சைபர் கிரைம் போலீசாரும் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்ட கணினியின் ஐபி முகவரி உள்ளிட்ட விபரங்களை அம்பத்தூர் போலீசாருக்கு அளித்தனர்.

அதன் பின்னரே அம்பத்தூர் மகளிர் போலீசார் மாணவியின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய மகாதேவன் எனும் இன்ஜினியரிடம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி தேனியைச் சேர்ந்த மகாதேவன் தந்தை இறந்த நிலையில் அம்மா மற்றும் மகளுடன் சென்னை அம்பத்தூர் ஓரகடம் காஞ்சி நகரில் குடியிருந்து வருகிறார். தனியார் கம்பெனியில் வேலைபார்க்கும் மகாதேவன் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்ப, மாணவி மகாதேவனிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார். காதலியுடன் பேச முடியாமல் தவித்த மகாதேவன் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், ஆத்திரத்தில் கல்லூரி மாணவியின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் மாணவி மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர், குடியிருக்கும் தெருவில் உள்ள பெண்கள் உள்ளிட்டோரின் செல்போன் நம்பர்களை பதிவுசெய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மாணவி மற்றும் பெண்கள் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்ட தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர் அந்த செல்போன் நம்பர்களுக்கு போன் செய்து ஆசமாக பேசியுள்ளனர். இவ்வாறு ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள போலீசார் இன்ஜினியர் மகாதேவனை கைது செய்துள்ளனர். மகாதேவனின் இந்த செயலால் ஓரகடம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச போன் அழைப்புகள் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்